ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்தியாவைப் போலவே சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்று அவர் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். இருப்பினும் தற்போது 42 வயதை கடந்து விட்ட அவர் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்து சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அந்த வாய்ப்பிலும் முழங்கால் வலியால் அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்ய வந்தார்.
2025இல் தோனி:
அந்த வாய்ப்பில் அதிரடியாக விளையாடிய தோனி வயதானாலும் ஸ்டைல் மாறவில்லை என்பதை நிரூபித்தார். இருப்பினும் ருதுராஜ் தலைமையில் 2024 சீசனில் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்பும் வாய்ப்பை நழுவ விட்டது. அதனால் ஐபிஎல் தொடரில் தோனி ஓய்வு பெற்று விட்டதாக சில செய்திகளும் வெளிவந்தன.
அந்த சூழ்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் வீரர் விதிமுறையை சிஎஸ்கே கோரிக்கைக்கு இணங்க மீண்டும் பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாக தோனி மீண்டும் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்டு விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவீர்களா என்று சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் தோனியிடம் நேரடியாகவே தொகுப்பாளர் கேட்டார். அதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.
டபுள் ட்ரீட்:
“கிரிக்கெட்டில் இன்னும் நான் விளையாட உள்ள சில வருடங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன். கிரிக்கெட் போன்ற தொழில்முறை விளையாட்டில் நீங்கள் விளையாடும் போது அது சாதாரண விளையாட்டு என்று எளிதாக எடுத்துக் கொள்வது கடினம். அதைத்தான் நான் செய்ய விரும்புகிறேன். ஆனால் அது எளிதல்ல. உணர்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது”
இதையும் படிங்க: அந்த இந்திய வீரர் அற்புதமா ஆடுனாரு.. அதையும் தாண்டி ஜெயிச்சது இப்படி தான்.. ஆட்டநாயகன் சான்ட்னர் பேட்டி
“இன்னும் சில வருடங்கள் நான் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளேன். ஐபிஎல் தொடரில் இரண்டரை மாதங்கள் விளையாடுவதற்காக நான் 9 மாதங்கள் என்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் திட்டமிட வேண்டும். அதே சமயம் நீங்கள் கூலாகவும் இருக்க வேண்டும்” என்று கூறினார். இதிலிருந்து 2025 மட்டுமல்ல 2026 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்று தோனி மறைமுகமாக சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் குறிப்பை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



