சிஎஸ்கே அணியுடன் 15 – 20 வருஷம் இருப்பேன்.. அதுக்காக இதை செய்வேன்னு நினைக்காதீங்க.. தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். 2008 முதலே ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் அவர் 5 கோப்பைகளை கேப்டனாக வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக காணப்படுகிறது.

ஏனெனில் 45 வயதை தொட்டுள்ள அவர் முழங்காலில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் சமீப காலங்களாக முழுமையாக பேட்டிங் செய்வதில்லை. கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடும் அவரால் பழைய பன்னீர்செல்வமாக அதிரடியாகவும் பேட்டிங் செய்ய முடியவில்லை. அதனால் எப்போது வேண்டுமானாலும் தோனி ஐபிஎல் தொடரிலும் விடை பெறலாம் என்ற நிலைமை காணப்படுகிறது.

- Advertisement -

அடுத்த 15 – 20 வருடங்கள்:

இருப்பினும் இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக தோனி சாதனை படைத்துள்ளார். அதனால் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவதை இப்போதும் நிறைய ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் இன்னும் 15 – 20 வருடங்கள் சிஎஸ்கே அணியுடன் தாம் இருப்பேன் என்று எம்எஸ் தோனி தெரிவித்துள்ளார்.

அதற்காக இன்னும் 15 – 20 வருடங்களும் தம்மால் களமிறங்கி விளையாட முடியும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கக் கூடாது என தோனி ஜாலியாக பேசியுள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நானும் சிஎஸ்கே அணியும் ஒன்றாக இருக்கிறோம். சொல்லப்போனால் அடுத்த 15 – 20 வருடங்களுக்கு நாங்கள் ஒன்றாகவே இருப்போம்”

- Advertisement -

தோனி அறிவிப்பு:

“அதற்காக நான் அடுத்த 15 – 20 வருடங்கள் விளையாடுவேன் என்று அவர்கள் நினைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். நான் சிஎஸ்கே அணியில் மஞ்சள் ஆடையை அணிந்து எப்போதும் அமர்ந்திருப்பேன். களத்திற்கு சென்று விளையாடுவேனா அல்லது இல்லையா என்பது சீக்கிரம் தெரியும். ஆனால் சிஎஸ்கே அணியில் நான் தொடர்ந்து இருப்பேன் என்பது உங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இளம் இந்திய அணி அசத்திடாங்க.. இதே மாதிரி 2010இல் நாங்க ஒரு த்ரில்லர் மேட்ச் ஜெய்ச்சோம்.. கிர்ஸ்டன் மகிழ்ச்சி

அதாவது ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து தாம் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக இருப்பேன் என்று தோனி கூறியுள்ளார். அதனால் ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணியின் வருங்காலத்தை தோனி பின்புலத்தில் இருந்து கட்டமைப்பார் என்று நம்பலாம். அவருடைய இந்த முடிவு சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பதாக இருக்கிறது.

Advertisement