ஐபிஎல்’ல கருணை கிடைக்காது.. 43 வயதிலும் அந்த காதலுக்காக இதை செய்றேன்.. இந்தியா தான் முக்கியம்.. தோனி பேட்டி

MS Dhoni 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்ற பின் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சிஎஸ்கே அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ளார். இருப்பினும் தற்போது அவர் 43 வயதை கடந்துள்ளார்.

அதன் காரணமாக சிஎஸ்கே கேப்டன்ஷிப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ள தோனி கீப்பராக மட்டும் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் முழங்கால் வலியை தாண்டி கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டும் விளையாடும் தோனி குறைவான பந்துகளை எதிர்கொண்டாலும் அதிரடியாக விளையாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வரிசையில் 2025 சீசனில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார்.

- Advertisement -

போட்டிமிக்க ஐபிஎல்:

இந்நிலையில் சர்வதேச தரத்திற்கு நிகரான ஐபிஎல் தொடரில் வயதிற்காக எந்த கருணையும் கிடைக்காது என்று தோனி தெரிவித்துள்ளார். எனவே அதில் 43 வயதிலும் அசத்துவதற்காக வருடம் முழுவதும் ஃபிட்னெஸ் கடைபிடிப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “வருடத்தில் நான் சில மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன்”

“ஆனால் அதை விளையாடத் துவங்கிய விதத்தைப் போல் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அதுவே என்னைத் தொடர்ந்து விளையாட வைக்கிறது. அதே சமயம் அதற்காக நான் 6 முதல் 8 மாதங்கள் கடின உழைப்பை போட வேண்டும். ஏனெனில் ஐபிஎல் என்பது மிகவும் கடினமான தொடர்களில் ஒன்று. அதில் நீங்கள் எவ்வளவு வயதானவர்கள் என்பதை பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள்”

- Advertisement -

இந்தியா முக்கியம்:

“நீங்கள் இந்த லெவலில் விளையாடினால் அங்கு அசத்துவதற்கு தேவையான லெவலைக் கொண்டிருக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டை நான் விளையாடத் துவங்கிய போது நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பற்றி பெரிய பின்புலம் இல்லாத மாநிலத்தில் இருந்த வந்த எனக்கு ஒரு முறை வாய்ப்பு கிடைத்ததும் நாட்டுக்காக பங்காற்ற விரும்பினேன்”

இதையும் படிங்க: ஏற்கனவே 2 முறை சாய்ச்சாச்சு.. இந்தமுறையும் விடமாட்டம்.. இந்திய அணியை விடமாட்டோம் – எச்சரித்த பாக் வீரர்

“எனக்கு நாடு மட்டுமே முக்கியமாக இருக்கும். நானும் நம் நாட்டின் வெற்றி பெற்ற அணியில் அங்கமாக இருக்க விரும்பினேன். அதற்காக நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் பெரிய தொடர்களிலும் வெற்றிக்காக பங்காற்ற முயற்சிக்க வேண்டும். இப்போது நான் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டேன். அது அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீதான எனது காதல் அப்படியே தான் இருக்கும்” என்று கூறினார்.

Advertisement