ஏற்கனவே 2 முறை சாய்ச்சாச்சு.. இந்தமுறையும் விடமாட்டம்.. இந்திய அணியை விடமாட்டோம் – எச்சரித்த பாக் வீரர்

rauf
- Advertisement -

2025-ஆம் ஆண்டிற்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளதால் அடுத்ததாக இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள ஆட்டம் அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது. இந்திய நேரப்படி பிப்ரவரி 23-ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு துபாய் மைதானத்தில் துவங்க இருக்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணியும் இந்திய அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்தியாவை ஈஸியா வீழ்த்தி காட்டுவோம் : ஹாரிஸ் ரவுப்

ஐசிசி தொடர்களில் எப்பொழுதுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி இம்முறையும் தங்கது ஆதிக்கத்தை வெளிக்காட்டும் முனைப்புடன் களமிறங்க காத்திருக்கிறது. அதேபோன்று முதல் போட்டியில் அடைந்த தோல்வியால் ஏமாற்றம் அடைந்துள்ள பாகிஸ்தான் அணி மீண்டும் எழுச்சிபெற வேண்டும் என்று இந்திய அணிக்கு எதிராக விளையாட உள்ளதால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் வெற்றி பெறுவோம் என பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ரவுப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எங்களது அணியில் உள்ள வீரர்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை என்று நினைக்கிறேன். அனைவரும் ரிலாக்ஸாக இருக்கிறோம்.

மற்ற நாடுகளுக்கு எதிரான போட்டியில் எவ்வாறு விளையாடுகிறோமோ அதே போன்று தான் இந்திய அணிக்கு எதிரான போட்டியையும் நாங்கள் எதிர்கொள்ள உள்ளோம். தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் அனைவருமே பாசிட்டிவான எண்ணங்களைக் கொண்டவர்கள் என்பதனால் நிச்சயம் இந்த போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இந்திய அணிக்கெதிரான போட்டியில் மூன்று வகையான பிரிவிலும் எங்களுடைய முழு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது திட்டமாக உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை துபாய் மைதானத்தில் இந்திய அணியை நாங்கள் வீழ்த்தியுள்ளதால் இம்முறையும் அதேபோன்று நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தி இந்திய அணியை எளிதாக வீழ்த்துவோம் என்று ஹாரிஸ் ரஃவுப் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இன்னும் கொஞ்சம் இருக்கனும் தல.. கோரிக்கை வைத்த சாம்சன்.. ரஜினி ஸ்டைலில் நெஞ்சை தொட்ட தோனி

இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி 6 போட்டிகளில் இந்திய அணியே ஐந்துக்கு பூஜ்யம் (5-0) என்று பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியுள்ளதால் நாளைய இந்த போட்டியிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement