ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு தங்களுடைய சொந்த மைதானத்தில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற முயற்சிக்கவுள்ளது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே தொடர் தோல்விகளால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.
இருப்பினும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தவிக்கும் அந்த அணி ஆறுதல் வெற்றிகளைப் பெற்று 7, 8 போன்ற இடங்களை பிடிக்க முயற்சிக்க உள்ளது. அந்த சூழ்நிலையில் துவங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். மேலும் பிளே ஆஃப் வாய்ப்பு தவறினாலும் எஞ்சியுள்ள 4 போட்டிகளையும் சிஎஸ்கே பயன்படுத்த உள்ளதாக தோனி கூறினார்.
வெற்றியை முக்கியம்:
அந்த 4 போட்டிகளில் வெற்றியைப் பற்றி கவலைப்படாமல் அடுத்த வருடம் அசத்துவதற்கு எந்த வீரர்கள் சரியானவர்கள் என்பதை வாய்ப்பு கொடுத்து கண்டறிய உள்ளதாகவும் தோனி தெரிவித்தார். அத்துடன் தங்களுடைய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்த தோனி இது பற்றி பேசியது பின்வருமாறு.
“நாங்கள் முதலில் பவுலிங் செய்யப் பார்க்கிறோம். எங்களுடைய கடைசி 4 போட்டிகளை முடிந்தளவுக்கு அதிகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் அடுத்த வருடத்தைப் பார்த்து அதில் எந்த வேலையில் எந்த தனிப்பட்ட பொருந்துவார்கள் என்பதைப் பார்க்க முயற்சிக்க உள்ளோம். ஆம் நாங்கள் போட்டிகளையும் வெல்ல விரும்புகிறோம்”
தோனி கருத்து:
“ஆனால் இந்த 4 போட்டிகளையும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். பிட்ச் கொஞ்சம் தந்திரமான மற்றும் தார்பாய்க்கு கீழே கொஞ்சம் நேரம் மூடப்பட்டிருந்தது போல் தெரிகிறது. மற்ற படி இந்த மைதானம் பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் இடமாகும். இங்கே ஆரம்பகட்ட நேரங்களுக்குப் பின் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும்”
இதையும் படிங்க: என்னுடைய கரியரில் நான் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் இந்த 4 பேர்தான் – தனித்தனியாக அறிவித்த விராட் கோலி
“உங்களை வெளிப்படுத்துவது முக்கியம். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தங்களுடைய பலத்திற்குத் தகுந்தார் போல் விளையாட வேண்டும். நீங்கள் பவுலராக இருந்தால் செயல்படுத்துதல் சரியாக இல்லாமல் இருந்திருக்கும் பட்சத்தில் இப்போது புதிய திட்டத்தை உருவாக்கி முழு தன்னம்பிக்கையுடன் பவுலிங் செய்யுங்கள். பவர் பிளேவில் என்ன திட்டம் வைத்திருக்கிறோம் என்பது அப்படியே இருக்கட்டும் ரவி சாஸ்திரி பாய். நாங்கள் அதே அணியுடன் விளையாடுகிறோம்” என்று கூறினார்.



