இந்த ரகசியத்தை மட்டும் நான் வெளிய சொல்லிட்டா யாரும் என்னை ஏலத்துல எடுக்கமாட்டாங்க – வைரலாகும் தோனியின் பேட்டி

Bhogle-and-dhoni
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமாக திகழும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சி.எஸ்.கே அணியானது இதுவரை 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 4 முறை கோப்பையை வென்று அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் மும்பை அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 16-ஆவது ஐ.பி.எல் தொடரில் 10 ஆவது முறையாக சி.எஸ்.கே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அப்படி இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றால் ஐ.பி.எல் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக மும்பை அணியுடன் சமநிலை வகிக்கும்.

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அணியின் கேப்டன் தோனி அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணியானது பிளே ஆப் சுற்றிற்கு முன்னேறியபோது பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தோனியை பேட்டி கண்டார்.

அப்போது ஹர்ஷா போக்ளே : ஒவ்வொரு ஆண்டும் சி.எஸ்.கே அணி எவ்வாறு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுகிறது? அதற்கான ரகசியம் என்ன என்று தோனியிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளிக்கும் தோனி கூறுகையில் : அந்த விஷயத்தை மட்டும் நான் எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி கூறினால் யாரும் என்னை ஏலத்தில் எடுக்கமாட்டார்கள். அது ட்ரேட் சீக்ரெட் என சிரித்தபடியே பதிலளித்து வெளியேறினார்.

- Advertisement -

இப்படி தோனி பிளே ஆப் சுற்று குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மழுப்பலாகவும், அதே சமயத்தில் சாமர்த்தியமாகவும் பதிலளித்த இந்த விடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : IPL 2023 : இதுவே தோனியா இருந்தா ஆஹா ஓஹோன்னு பாராட்டிருப்பீங்க, நட்சத்திர வீரரின் கேப்டன்ஷிப்பை – ஆதங்கத்துடன் புகழ்ந்த கவாஸ்கர்

இந்த ஆண்டு நடைபெற்று வரும் 16-ஆவது ஐ.பி.எல் சீசனானது சென்னை அணியின் கேப்டன் தல தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்று பார்க்கப்படுவதால் இந்த ஆண்டு அவர் கோப்பையை வென்று வெற்றியுடன் விடைபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பாப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement