சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 44 வயதை எட்டியுள்ள வேளையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரே அவருக்கு கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தோனியின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளில் அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடவில்லை.
மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்த தல தோனி :
ஏனெனில் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களை அவர் தவற விடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது காயத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ள தோனி படிப்படியாக வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதன் காரணமாக இன்று ஏப்ரல் 14-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. அப்படி இந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக தோனி வலைப்பயிற்சியில் ஈடுபட்டாலும் இன்று துவங்கி நடைபெற்று வரும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாடவில்லை.
இதன் காரணமாக தொடர்ச்சியாக அவர் ஐந்தாவது போட்டியிலும் விளையாட முடியாமல் போனது. இதனால் அவரது ஆட்டத்தை நேரில் காண வந்த சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நிச்சயம் அடுத்த ஆண்டு தோனி விளையாட முடியாது என்கிற நிலையில் ஒருமுறை எப்படியாவது தோனியின் ஆடடத்தை நேரில் காண வேண்டும் என்று வந்த ரசிகர்களுக்கு இன்றும் ஒருமுறை தோனி ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் செய்த இந்த மாற்றங்கள் தான்.. அவருடைய அருமையான ஆட்டத்திற்கு காரணம் – ஜாஹீர் கான் பாராட்டு
கடந்த போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்திருந்த வேளையில் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றியை நோக்கி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



