சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் செய்த இந்த மாற்றங்கள் தான்.. அவருடைய அருமையான ஆட்டத்திற்கு காரணம் – ஜாஹீர் கான் பாராட்டு

Zaheer Khan and Samson
- Advertisement -

கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சி.எஸ்.கே அணியானது டிரேடிங் முறையில் தங்களது அணிக்குள் கொண்டு வந்தது. நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் சி.எஸ்.கே அணிக்காகவும் இந்த ஐபிஎல் தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய அவர் 6, 7 மற்றும் 9 என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்தார்.

சஞ்சு சாம்சனின் மாற்றத்திற்கு இதுவே காரணம் : ஜாஹீர் கான்

இப்படி சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வந்தது பலரது மத்தியிலும் பெரிய ஏமாற்றத்தை அளித்திருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 56 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 115 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். இந்த தொடரில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்த சாம்சன் இனிவரும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக சி.எஸ்.கே அணியின் ரசிகர்களும் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் விளையாடிய சஞ்சு சாம்சன் தற்போது சதம் அடித்து அற்புதமாக விளையாட அவர் செய்த சில பேட்டிங் மாற்றங்களே காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் சில பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சஞ்சு சாம்சன் ரிஸ்க் இல்லாமல் விளையாடுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் கடந்த 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நிறைய சிக்ஸர்களை அடித்தார். தற்போது அவரை பார்க்கும்போது நிறைய சிக்ஸர்களை அடிக்க முயற்சிப்பதில்லை. ஆனாலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் சிறப்பாக விளையாடுகிறார். இதற்கு காரணம் யாதெனில் : கடந்த போட்டியில் கூட 15 பவுண்டரிகளை அடித்த அவர் பெரிய ரிஸ்க் எடுத்து சிக்ஸர்களை அடிக்காமல் டி20 போட்டிகளுக்கு ஏற்றவாறு இடைவெளியை கண்டுபிடித்து அங்கு பவுண்டரி அடிக்கிறார். எனவே அவருடைய பவுண்டரி அடிக்கும் சதவீதம் அதிகமாக இருக்கிறது. இதனால் அவரால் ஸ்ட்ரைக் ரேட்டையும் அதிகமாக வைத்துக்கொண்டு நிறைய ரன்களை குவிக்க முடிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டக் அவுட்டானா பரவாயில்லை.. அபிஷேக் சர்மாவிடம் இருந்து நான் எதிர்பார்ப்பது இதுதான் – இஷான் கிஷன் வெளிப்படை

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சிக்ஸ் அடிக்க மட்டுமே முயற்சிக்காமல் சரியான நேரங்களில் சரியான இடைவெளியில் பவுண்டரிகளை தொடர்ச்சியாக அடித்துக் கொண்டே வந்தார். அப்படி ஒருபுறம் பவுண்டரிகளை அடிக்க ரன்கள் வரும் பட்சத்தில் நீங்கள் ஈசியாக பெரிய ஷாட்டிற்கும் செல்லலாம். எனவே அவர் தற்போது சில டெக்னிக்கல் மாற்றங்களை செய்து இப்படி சிறப்பாக விளையாடி வருகிறார் என ஜாஹீர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement