இதை மட்டும் மஹி பாய் பாத்தா.. அந்த பிரமோஷன் கிடைச்சுரும்.. துபேவை பாராட்டிய ரெய்னா

Shivam Dube 3
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக துவங்கியுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முகமது நபி 42, ஓமர்சாய் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் 159 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு ரோஹித் சர்மா 0, திலக் வர்மா 26, கில் 23 ரன்களில் அவுட்டானாலும் மிடில் ஆர்டரில் சிவம் துபே அதிரடியாக விளையாடிய 60* (40) ரன்கள் எடுத்து ஃபினிஷிங் செய்தார். அவருடன் ஜித்தேஷ் சர்மா 31 ரிங்கு சிங் 16* ரன்கள் எடுத்ததால் 17.3 ஓவரிலேயே எளிதாக வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

பாராட்டிய ரெய்னா:
இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 2 ஓவரில் 9 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் மற்றும் பேட்டிங்கில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 60* (40) ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சிவம் துபே ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 2019இல் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் கழற்றி விடப்பட்டார்.

அதே போல ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் தடுமாறிய அவர் கடந்த 2022இல் சென்னை அணிக்காக வாங்கப்பட்டார். அதில் தோனி தலைமையில் 2023 சீசனில் 35 சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் தம்முடைய ஐபிஎல் கேரியரிலேயே உச்சமாக 411 ரன்கள் குவித்து சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கடந்த வருடம் சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணிக்காக தேர்வான அவர் தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

- Advertisement -

அதை தொடர்ந்து தற்போது சீனியர் அணியிலும் கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே ஆல் ரவுண்டராக அசத்தியுள்ள அவர் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியாவின் வெற்றியில் பங்காற்றியுள்ளார். இந்நிலையில் இப்போட்டியில் நீங்கள் பந்து வீசியதை பார்த்தால் 2024 ஐபிஎல் சீசன்னில் உங்களுக்கு 3 ஓவர்கள் பந்து வீச தோனி வாய்ப்பு கொடுப்பார் என்று போட்டியின் முடிவில் ரெய்னா பாராட்டினார். இது பற்றி ரெய்னா ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: 19 ரன்ஸ் 7 விக்கெட்.. ஜிம்பாப்வேவுக்கு தண்ணி காட்டிய இலங்கை.. ஹஸரங்கா அபார உலக சாதனை

“ஒருவேளை மஹி பாய் உங்களுடைய பவுலிங்கை பார்த்தால் பின்னர் சிஎஸ்கே அணியில் உங்களுக்கு இந்த சீசனில் 3 ஓவர்கள் கண்டிப்பாக கிடைக்கும்” என்று கூறினார் அதற்கு துபே. “மஹி பாய் தயவு செய்து ரெய்னா பாய் சொல்வதைக் கேளுங்கள்” என்று பதிலளித்து கோரிக்கை வைத்தார். அதாவது கடந்த வருடம் சென்னை அணியில் பந்து வீச துபேவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த சீசனில் அந்த வாய்ப்பை கொடுத்தால் சிறப்பாக செயல்பட்டு 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பிடிக்கப் போராடுவேன் என்று தோனிக்கு மறைமுகமாக துபே கோரிக்கை வைப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement