தல தல தான்.. அசைக்க முடியாத சாதனையை ஐ.பி.எல் வரலாற்றில் நிகழ்த்தியுள்ள தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறயிருக்கும் பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் வீரர்களின் அணிமாற்றம் நடைபெற்றதால் இந்த எதிர்வரும் ஐபிஎல் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வீரர்களை தங்களது அணியில் நேரடியாக தக்க வைக்கலாம் என்றும் கூறப்பட்டது.

தோனி நிகழ்த்தியுள்ள மாபெரும் சாதனை :

அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற குறிப்பிட்ட ஆண்டுகளான பின்னர் அன் கேப்ட்டு வீரராக நான்கு கோடி ரூபாய்க்கு வீரர்களை நேரடியாக அணியில் தக்க வைக்கலாம் என்று குறிப்பிட்ட விதிமுறையும் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது.

- Advertisement -

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அந்த அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியை 4 கோடி ரூபாய் என்கிற அடிப்படை விலைக்கு அன் கேப்ட்டு வீரராக தக்க வைத்தது. இதன் காரணமாக 43 வயதான மகேந்திர சிங் தோனி இன்னும் ஒரு ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாட இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி தற்போது 43 வயது எட்டியுள்ளதால் அவருக்கு இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் படைக்காத சாதனை மட்டுமின்றி இனி யாராலும் முறியடிக்க முடியாத சாதனை ஒன்றினை தோனி நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 226 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் 133 வெற்றிகளையும், 91 தோல்விகளையும் பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : 12/3 டூ 181 ரன்ஸ்.. துபே கலக்கல் கம்பேக்கில் இங்கிலாந்திடம் சிக்காமல் வந்த இந்தியா.. பாண்டியா தனித்துவ சாதனை :

இதன் மூலம் கேப்டனாக அதிக ஐ.பி.எல் வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை தோனி நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 87 வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். நிச்சயம் இனிவரும் எந்த ஒரு கேப்டனாலும் ஐபிஎல் தொடரில் இத்தனை வெற்றிகளை கேப்டனாக பெற முடியாது என்பது அசைக்க முடியாத சாதனை என்று கூறலாம்.

Advertisement