இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வென்ற இந்தியாவை மூன்றாவது போட்டியில் வீழ்த்திய இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டது. அந்த நிலைமையில் இந்தத் தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு புனே நகரில் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சனை 2வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டாக்கிய சாகிப் மத்மூத் அடுத்த பந்திலேயே திலக் வர்மாவை டக் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் கடைசிப் பந்தில் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமாரையும் டக் அவுட்டானார்.
துபே – பாண்டியா அசத்தல்:
அதனால் 12/0 டூ 12/3 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவுக்கு மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த அபிஷேக் சர்மாவும் 29 (19) ரன்களில் அவுட்டானார். அதைத்தொடர்ந்து வந்த சிவம் துபே அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் அதிரடி காட்ட முயற்சித்த ரிங்கு சிங் முக்கியமான 30 (26) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.
நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் 13 ஓவர்களுக்குப்பின் இருவருமே வேகமாக ரன்களை குவிக்கத் துவங்கினார்கள். அந்த வகையில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அந்த ஜோடியில் 4 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்க விட்ட ஹர்திக் பாண்டியா அரை சதமடித்து 53 (30) ரன்கள் விளாசி அவுட்டானார்.
துபே கம்பேக்:
அடுத்து வந்த அக்சர் படேல் 5, அர்ஷ்தீப் 0 ரன்களில் அவுட்டானார். ஆனால் எதிர்புறம் சேர்ந்து விளையாடிய துபாய் தம்முடைய ஸ்டைலில் சிக்ஸர்களை அடித்து அரை சதத்தை கடந்தார். தொடர்ந்து அசத்திய துபே 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 (34) ரன்களில் அவுட்டானாலும் நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் காயத்தால் இந்த தொடரில் தேர்வு செய்யப்படாத அவர் இப்போட்டியில் கடைசி நேரத்தில் தேர்வானார்.
இதையும் படிங்க: 136/5 என ஆஸியிடம் திணறும் இலங்கை.. டேல் ஸ்டைனை முந்திய ஸ்டார்க்.. பிறந்தநாளில் அபார சாதனை
அந்த வாய்ப்பில் அரை சதமடித்த துபே சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். அவரது அதிரடியால் 20 ஓவரில் இந்தியா 181-9 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சாகிப் மஹ்ம்மத் 3, ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்தப் போட்டியின் 6வது இடத்தில் களமிறங்கி அரை சதமடித்த பாண்டியா ஏற்கனவே 5, 7வது இடங்களில் 50 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5, 6, 7 ஆகிய 3 வேறு இடங்களில் அரை சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.



