தப்பு பண்ணிட்டீங்களே ரோஹித்! தனிஒருவன் தோனி நிற்கும்போது கடைசி ஓவரை போய் அவரிடம் கொடுக்கலாமா?

Rohit Sharma MS Dhoni
- Advertisement -

அனல் பறக்கும் ஐபிஎல் தொடர் 3-வது வாரத்தை கடந்து வரும் நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பையை வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்புச் சாம்பியன் சென்னை இந்த வருடம் பங்கேற்ற 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது. நவி மும்பையில் மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை கடும் போராட்டத்திற்குப் பின் 155/7 ரன்கள் சேர்த்தது.

MI vs CSK 2

- Advertisement -

ஏனெனில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா இஷான் கிசான் ஆகியோர் அடுத்தடுத்து முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க நடு வரிசையில் நங்கூரமாக நின்ற இளம் வீரர் திலக் வர்மா 51* (43) ரன்களும் சூர்யகுமார் யாதவ் 32 (21) ரன்களும்சேர்த்து சரிந்த தங்களது அணியை மீட்டெடுத்தனர். மறுபுறம் சென்னை சார்பில் பந்துவீச்சில் மிரட்டலாக செயல்பட்ட முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும் டுவைன் பிராவோ 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர் ருத்ராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சியளிக்க அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர் 11 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

தல தோனி மாஸ் பினிஷிங்:
அதனால் 16/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் சேர்த்து வெற்றிக்காக போராடினார்கள். அதை வீணடிக்கும் வகையில் அடுத்து வந்த ஷிவம் துபே 3 (8) கேப்டன் ஜடேஜா 13 (14) என சொற்ப ரன்களில் அவுட்டானதால் 106/6 என தடுமாறிய சென்னை தோல்வியின் பிடியில் மாட்டியது. அந்த நேரத்தில் களமிறங்கிய எம்எஸ் தோனியுடன் கைகோர்த்த ட்வயன் பிரிடோரியஸ் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 (14) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடினார்.

MS Dhoni Finisher

அந்த நிலையில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய ஜெய்தேவ் உனட்கட் முதல் பந்தில் பிரிடோரியசை அவுட் செய்து மும்பையை முன்னிலைப் படுத்தினார். அப்போது களமிறங்கிய ட்வைன் பிராவோ சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை தோனியிடம் கொடுக்க கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 4 என சிக்ஸரையும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட எம்எஸ் தோனி மொத்தம் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 28* ரன்கள் எடுத்து மிரட்டலான பினிஷிங் கொடுத்து சென்னைக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

ரோஹித்தின் தவறு:
மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பை பங்கேற்ற 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால் வரலாற்றிலேயே முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற படு மோசமான சாதனை படைத்தது. அத்துடன் இந்த வருட ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேறியதும் உறுதியாகிறது.

MS Dhoni vs MI

முன்னதாக இந்தப் போட்டியில் டக் அவுட்டான கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சின் போது பவுலர்களை அபாரமாக பயன்படுத்தி கடைசி ஓவர் வரை வெற்றியை இழுத்துப் பிடித்துக் கொண்டு வந்தார். ஆனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீச ஜெயதேவ் உனட்கட்’டை அவர் தேர்வு செய்து முடிவு மிகப்பெரிய தவறாக மாறியது. ஏனெனில் மிகச்சிறந்த ஃபினிஷராக கருதப்படும் எம்எஸ் தோனி வரலாற்றில் இதற்கு முன் பல முறை அவரை  சரமாரியாக அடித்து ரன்களை விளாசியுள்ளார். அதை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜயதேவ் உனட்கட்’க்கு எதிராக 43 பந்துகளை சந்தித்துள்ள எம்எஸ் தோனி அதில் 105 ரன்களை 244.18 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் எடுத்துள்ளார். இதில் 7 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.

Mi Mumbai

2. அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் நேற்றைய போட்டியுடன் சேர்த்து 11 பந்துகளை எதிர்கொண்ட தோனி அதில் 47 ரன்கள் 427.30 என அனல் பறக்கும் ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியுள்ளார். ஒருமுறை கூட அவுட்டானதே கிடையாது.

- Advertisement -

3. மேலும் நேற்று கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது அதை பரிசளிக்கும் வகையில் பந்துவீசிய உனட்கட் வெற்றியை கோட்டை விட்டார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்தில் 4 ரன்கள் என்ற நிலையில் எதிரணியிடம் மும்பை வெற்றியை கோட்டை விட்டது இதுவே முதல் முறையாகும்.

MS Dhoni 28

4. இதே காரணத்துக்காக மும்பைக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக சேசிங் செய்கையில் வெற்றிகரமாக 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற செய்த முதல் பேட்ஸ்மேன் என்ற மகத்தான பெருமையை தோனி பெற்றார்.

இதையும் படிங்க : துள்ளி குதித்த நடிகர் சூரி, சினிமா நட்சத்திரங்களையும் கொண்டாட வைத்த தல தோனி – வைரலாகும் வீடியோ

அது போன்ற நிலைமையில் கேப்டனாக ரோஹித் சர்மா 19-வது ஓவரை உனட்கட் வசம் கொடுத்து 20-வது ஓவரை ஜஸ்பிரித் பும்ராவிடம் கொடுத்திருந்தால் ஒருவேளை மும்பை வெற்றி பெற்றிருக்கக் கூடும்.

Advertisement