துள்ளி குதித்த நடிகர் சூரி, சினிமா நட்சத்திரங்களையும் கொண்டாட வைத்த தல தோனி – வைரலாகும் வீடியோ

Actress Soori Celebrates MS DHONI Finish
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பையை தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் வெறும் 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. அதன் காரணமாக இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பரிதாப சாதனைக்கு சொந்தமாகியது. அத்துடன் இந்த தொடர் தோல்விகளால் இந்த வருட ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக மும்பை வெளியேற உள்ளது.

முன்னதாக நவி மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை போராடி 155/7 ரன்களை குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா இஷன் கிஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த டக் அவுட்டானதால் ஏற்பட்ட சரிவை நடுவரிசையில் தாங்கிப் பிடித்த இளம் வீரர் திலக் வர்மா 51* (43) ரன்களும் சூரியகுமார் யாதவ் 32 (21) ரன்களும் எடுத்து காப்பாற்றினர். சென்னை சார்பில் அதிகபட்சமாக முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

தல தோனி வெறித்தனம்:
அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு முதல் பந்திலேயே தொடக்க வீரர் ருதுராஜ் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர் 11 (9) ரன்களில் அவுட்டானார். அதை தொடர்ந்து பொறுப்புடன் பேட்டிங் செய்த ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் எடுத்து வெற்றிக்காகப் போராடி அவுட்டானார்கள். ஆனால் அடுத்து களமிறங்கிய ஷிவம் டுபே 13 (14) கேப்டன் ஜடேஜா 3 (8) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டானதால் திடீரென சென்னையின் தோல்வி உறுதி என அனைவரும் நினைத்தனர்.

அப்போது களமிறங்கிய எம்எஸ் தோனி மற்றும் ட்ரெயின் பிரிடோரியஸ் ஆகியோர் அதிரடியாக ரன்களைச் சேர்த்தனர். இதில் 2 சிக்சர் 1 பவுண்டரி உட்பட 22 (14) ரன்கள் எடுத்து போராடிய பிரிட்டோரியஸ் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் பந்தில் அவுட்டானார். அந்த நிலைமையில் கடைசி 4 பந்துகளில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஜெயதேவ் உனட்கட் வீசிய அந்த ஓவரின் 3-வது பந்தில் பிரம்மாண்ட சிக்ஸரை தெறிக்கவிட்ட எம்எஸ் தோனி 4-வது பந்தில் பவுண்டரியை பறக்கவிட்டு 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

அந்த பரபரப்பான தருணத்தில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது மின்னல் வேக பவுண்டரியை விளாசிய அவர் சென்னைக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அவரின் இந்த மிரட்டலான ஆட்டத்தால் தோல்வியிலிருந்து தப்பியது சென்னை 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

கொண்டாடிய சூரி:
இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரில் சென்னைக்காகவும் இதுபோன்ற எத்தனையோ தோல்வி அடைய வேண்டிய போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கிய எம்எஸ் தோனி தனி ஒருவனாக எதிரணி பவுலர்களை சிக்சர்களாக பறக்கவிட்டு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர். அதன் காரணமாகவே பினிசர் என அழைக்கப்படும் அவருக்கு இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் நேற்றைய போட்டியில் வெறித்தனமான பினிஷிங் கொடுத்த அவர் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை மீண்டும் உண்மையாக்கி தன்னை வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிஷர் என நிரூபித்தார். நேற்றைய போட்டியில் கடைசி பந்தில் அவர் வெற்றியைத் தேடிக் கொடுத்ததை பலரும் கொண்டாடிய நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் சூரி வெறித்தனமாக கொண்டாடியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்றைய போட்டியில் மஞ்சள் உடையை அணிந்து கொண்டு தனது வீட்டின் டிவிக்கு மிக அருகே உட்கார்ந்து கொண்டு அப்போட்டியை பார்த்த அவர் தோனி பவுண்டரி அடித்தது வெற்றி பெற வைத்ததும் அதை துள்ளிக்குதித்து கொண்டாடி மகிழ்ந்தார். அதேபோல் வெங்கட் பிரபு போன்ற பல தமில் சினிமா முன்னணி இயக்குனர்களும் நடிகர்களும் நடிகைகளும் தோனியை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படிங்க : சென்னை அணிக்கெதிராக நாங்கள் கடைசி ஓவர்ல தோக்க இதுதான் காரணம் – மனமுடைந்த ரோஹித் சர்மா

அதைவிட சுமார் 50 – 60 வயதைச் சேர்ந்த ஒரு வயதானவரும் அவரின் மனைவியும் தோனியின் ஆட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சியில் கொண்டாடிய வீடியோவும் சமூக வளைதளத்தில் வைரலாகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமா நட்சத்திரங்கள் என பாரபட்சமின்றி அனைவரும் எம்எஸ் தோனியை கொண்டாடுவதை பார்க்கும் போது இத்தனை பேரின் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு எம்எஸ் தோனியின் மவுசு இமய மலையை தொட்டுள்ளது என்றே கூறலாம்.

Advertisement