சென்னை அணிக்கெதிராக நாங்கள் கடைசி ஓவர்ல தோக்க இதுதான் காரணம் – மனமுடைந்த ரோஹித் சர்மா

rohith
- Advertisement -

இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது ஜாம்பவான் அணிகளான சென்னை மற்றும் மும்பை அணிக்கு சரியான ஆண்டாக அமையவில்லை என்றே கூறலாம். ஏனெனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் மும்பை அணியானது ஆரம்பகட்டத்தில் இருந்தே தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக நேற்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

MI vs CSK 2

- Advertisement -

இருப்பினும் 7 போட்டிகளில் 5 தோல்வியை ஏற்கனவே சென்னை சந்தித்ததால் தற்போது நான்கு புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளன. ஆனால் மும்பை அணியானது தாங்கள் விளையாடிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து வரலாறு காணாத பின்னடைவை சந்தித்துள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த வேளையில் ஓரளவு போராடி இறுதியில் 155 ரன்கள் குவித்தது. பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் இடையே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ஒரு கட்டத்தில் மும்பை வெற்றி பெறும் நிலைக்கு வந்தது.

ஆனால் இறுதி நேரத்தில் தோனி அவரது அதிரடி ஆட்டம் மூலம் மும்பை அணியின் வெற்றிக்குத் தடை போட்டார் என்று கூறலாம். ஏனெனில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 13 பந்துகளில் 28 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதிலும் குறிப்பாக கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது மும்பை அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றளவும் உலகின் தலைசிறந்த பினிஷராக தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் வகையில் தோனி 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

MS Dhoni Finisher

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து ரோகித் சர்மா கூறுகையில் : கடைசி வரை இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான போராட்டத்தை அளித்தோம். இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியில் அபாரமாக பந்து வீச்சினை வெளிப்படுத்தி எங்களை போட்டியிலேயே வைத்திருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் தோனி எவ்வாறு அடிப்பார் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அவர் இந்த போட்டியை எங்களிடம் இருந்து பறித்துச் சென்று விட்டார்.

- Advertisement -

இந்த போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் என்று கை காட்டுவது மிகவும் கடினமான ஒன்று. இந்த போட்டியில் நாங்கள் சிறப்பான துவக்கத்தை அளிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டை இழக்கும்போது ரன்கள் வருவது கடினம். இருந்தாலும் இந்த போட்டியின் இறுதிவரை நாங்கள் சிறப்பாகவே போராடினோம்.

இதையும் படிங்க : ரொம்ப படபடப்பா தான் இருந்துச்சி. ஆனா உள்ள இருந்தது யாரு.. – வெற்றிக்கு பின் பேசிய ஜடேஜா சொன்னது என்ன?

ஆனால் இறுதி நேரத்தில் பிரிடோரியஸ் மற்றும் தோனி ஆகியோரது பார்ட்னர்ஷிப் எங்களிடமிருந்து இப்போட்டியை பறித்தது. இனி வரும் போட்டிகளில் இந்த தவறுகள் எல்லாம் திருத்திக் கொண்டு நாங்கள் முடிந்தவரை சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த முயற்சிப்போம் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement