ரொம்ப படபடப்பா தான் இருந்துச்சி. ஆனா உள்ள இருந்தது யாரு.. – வெற்றிக்கு பின் பேசிய ஜடேஜா சொன்னது என்ன?

Jadeja
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜடேஜா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்ததால் முதலில் மும்பை அணியானது பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களை குவித்தனர்.

Mukesh Chowdry

- Advertisement -

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது போட்டியின் கடைசி பந்தில் தோனி பவுண்டரி அடிக்க த்ரில் வெற்றியை பெற்றது. 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராயுடு 40 ரன்களையும், உத்தப்பா 30 ரன்களையும் குவித்தனர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 13 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் என 28 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அதிலும் குறிப்பாக கடைசி கட்டத்தில் 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற போது ஒரு சிக்சர் மற்றும் இரண்டு பவுண்டரிகளின் உதவியுடன் சென்னை அணியை அபாரமாக தோனி வெற்றிக்கு அழைத்துச் சென்றது ரசிகர்கள் மத்தியில் பெரிய பாராட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா கூறுகையில் : இந்த போட்டி உண்மையிலேயே கடைசி வரை மிகவும் பரபரப்பாக சென்றது.

MS Dhoni vs MI

இறுதிகட்டத்தில் நான் மிகவும் படபடப்பாகவே இருந்தேன். இருந்தாலும் உலகின் தலைசிறந்த பினிஷர் தோனி களத்தில் இருந்ததால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்ததை நாங்கள் உறுதி செய்து கொண்டோம். கடைசி வரை தோனி களத்தில் இருக்கும் போது நிச்சயம் ஏதாவது மேஜிக் செய்வார் என்பது எங்களுக்கு தெரியும். அந்த வகையில் இந்த போட்டியை அவர் எங்களுக்கு எங்களுக்காக வெற்றிகரமாக முடித்துக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

முகேஷ் சவுத்ரி இந்த போட்டியின் பவர்ப்ளே வின் போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நாம் சில போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றாலும் சரியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த போட்டியில் அதிக கேட்ச்களை தவறிவிட்டோம்.

இதையும் படிங்க : தல தலதான் ! 12 வருடத்துக்கு பின் அதே ஸ்கெட்ச் போட்டு பொல்லார்ட்டை தூக்கிய மேஜிக் – நடந்தது என்ன?

ஆனால் இதுபோன்று செய்வது முற்றிலும் தவறான ஒன்று தான். எனவே இனிவரும் போட்டிகளில் நல்ல பயிற்சியை மேற்கொண்டு பீல்டிங் முன்னேற்றம் காண்போம் என்றும் இனி வரும் போட்டிகளில் கேட்ச் வாய்ப்பை தவற விட மாட்டோம் எனவும் ஜடேஜா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement