தல தலதான் ! 12 வருடத்துக்கு பின் அதே ஸ்கெட்ச் போட்டு பொல்லார்ட்டை தூக்கிய மேஜிக் – நடந்தது என்ன?

MS Dhoni pollard
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21இல் நடந்த 33-வது லீக் போட்டியில் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடிய வெற்றிகரமான அணிகளான மும்பையும் சென்னையும் மோதின. இரு அணிகளுமே கண்டிப்பாக வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் நவி மும்பையில் நடைபெற்ற அந்த பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி சிக்சர் அடித்து பினிஷிங் செய்ததால் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை திரில் வெற்றியை ருசித்தது.

Mukesh Chowdry

- Advertisement -

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 155/7 சேர்த்தது. முதல் ஓவரிலேயே நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்து ஆட்டமிழக்க நடுவரிசையில் கடைசி வரை நின்று போராடிய திலக் வர்மா 51* ரன்களையும் சூர்யகுமார் யாதவ் 32 ரன்களையும் எடுத்து மும்பையை காப்பாற்றினர். சென்னை சார்பில் அதிகபட்சமாக முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பழைய பன்னீர்செல்வமாய் தோனி:
அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அடுத்து வந்த மிட்செல் சான்ட்னர் 11 ரன்களில் அவுட்டானர். அதைத்தொடர்ந்து ராபின் உத்தப்பா 30 ரன்களும் அம்பத்தி ராயுடு 40 ரன்களும் எடுத்து வெற்றிக்கு போராடி ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த சிவம் துபே 13, ஜடேஜா 3 ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை கொடுத்தனர். அதனால் 106/6 என தவித்த சென்னைக்கு அடுத்து களமிறங்கிய பிரெடோரியஸ் அதிரடியாக 22 (14) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார்.

MS Dhoni Finisher

அந்த பரபரப்பான தருணத்தில் கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் இந்தியாவின் மிகச் சிறந்த பினிஷர் என அழைக்கப்படும் எம்எஸ் தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை பறக்க விட்டு 28* (13) ரன்களை விளாசி மிரட்டலான பினிஷிங் கொடுத்து திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதனால் பங்கேற்ற 7 போட்டிகளில் 2-வது வெற்றியை பதிவு செய்த சென்னை பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மறுபுறம் பங்கேற்ற 7 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பெற்ற மும்பை ஐபிஎல் 2022 தொடரில் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறுவது உறுதியானது.

- Advertisement -

மாஸ்டர் மைண்ட் தோனி:
முன்னதாக இந்த போட்டியில் 111/6 என்ற நிலைமையில் களமிறங்கிய மும்பையின் கைரன் பொல்லார்ட்டை அவுட் செய்வதற்கு சென்னையின் எம்எஸ் தோனி கருப்பு குதிரையாக செயல்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் சென்னைக்கு எதிராக எப்போதுமே ஸ்பெஷலாக விளையாடக்கூடிய அவர் கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய போட்டியில் எடுத்த விஸ்வரூபத்தை யாராலும் மறக்க முடியாது. டெல்லியில் நடந்த அப்போட்டியில் 219 என்ற இலக்கை மும்பை துரத்துகையில் கடைசி நேரத்தில் களமிறங்கி வெறும் 34 பந்துகளில் 87* ரன்களை விளாசிய பொல்லார்ட் சென்னையைத் தனி ஒருவனாக தோற்கடித்ததை யார் மறந்தார்களோ இல்லையோ எம்எஸ் தோனி மறந்திருக்க மாட்டார்.

அப்படிப்பட்ட அபாயகரமான அவர் எப்போதுமே நேராக சிக்ஸர் அடிக்க விரும்புவார் என்பதை தெரிந்து வைத்துள்ள எம்எஸ் தோனி அவரை காலி செய்வதற்காக மகேஷ் தீக்சனா வீசிய 16.2-வது ஓவரில் லாங் ஆன் பீல்டரை கிட்டத்தட்ட நேராக நிறுத்தினார். அடுத்த பந்திலேயே எதிர்பார்த்தது போலவே சிக்சர் அடிக்க முயன்ற பொல்லார்ட் பவுண்டரி எல்லையில் எம்எஸ் தோனி நிறுத்திய சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதே யுக்தியை கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் போது முதல்முறையாக எம்எஸ் தோனி பயன்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 169 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது. அதன்பின் சச்சின் டெண்டுல்கர் போன்ற முக்கிய வீரர்களை வெற்றிகரமாக அவுட் செய்த சென்னைக்கு கடைசி நேரத்தில் களமிறங்கிய பொலார்ட் வெறும் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து தொல்லை கொடுத்தார். அப்போது முதல் முறையாக அந்த யுக்தியை பயன்படுத்திய தோனி ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடனை நேராக நிற்க சொல்ல அடுத்த பந்திலேயே கேட்ச் கொடுத்து பொல்லார்ட் அவுட்டாகி செல்வார். அதன் காரணமாக வரலாற்றின் தனது முதல் ஐபிஎல் கோப்பையை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை வென்று சாதனை படைத்தது.

அதன் காரணமாக தோனி ஓய்வு பெற்ற பின் பீல்டிங் செட் செய்வதற்காக தனியாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி வெளிப்படையாக பாராட்டியிருந்தார். இதில் ஆச்சரியப்படும் அம்சம் என்னவெனில் அந்த போட்டிக்கு பின் 12 வருடங்கள் கழித்து இந்த வருடம் தான் அதே டிஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் இவ்விரு அணிகளும் நேற்று சந்தித்தன.

இதையும் படிங்க : இவரா இப்படி ! ஹிட்மேன் ரோஹித் பெயருடன் சேர்ந்தது மோசமான பெயர் – ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை

ஆனால் 12 வருடங்கள் கடந்தாலும் மீண்டும் அதே மேஜிக்கை அதே மைதானத்தில் நிகழ்த்தி பொல்லார்ட்டை ஸ்கெட்ச் போட்டு தூக்கியதை பார்த்த ரசிகர்கள் தல தல தான் என்று தோனியை பாராட்டி வருகின்றனர்.

Advertisement