இவரா இப்படி ! ஹிட்மேன் ரோஹித் பெயருடன் சேர்ந்தது மோசமான பெயர் – ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை

Rohit Sharma Duck Out
- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 21-ஆம் தேதி நடைபெற்ற 33-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் சந்தித்தன. வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகள் என பெயரெடுத்த இவ்விரு அணிகளும் இந்த வருடம் தொடர்ச்சியான தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடி நிலையில் இந்த போட்டியில் வென்றேதீர வேண்டும் என்ற முனைப்பில் மோதின.

Mi Mumbai

- Advertisement -

அதிலும் தனது முதல் 6 போட்டிகளிலும் 6 தோல்விகளை சந்தித்த மும்பைக்கு இது வாழ்வா சாவா போட்டியாக மாறியது. ஆனால் நவி மும்பையில் நடைபெற்ற அந்த பரபரப்பான போட்டியில் கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடிய மும்பை 3 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் காரணமாக தனது முதல் 7 போட்டிகளிலும் தோல்வி அடைந்த அந்த அணி ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை பதிவு செய்த முதல் அணி என்ற மிகப் பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது.

மேலும் 5 சாம்பியன் பட்டத்தை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த மும்பை இந்த தொடர் தோல்விகளால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் முதல் அணியாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

MI Mumbai Indians

தடுமாற்ற சென்னை போராடி வெற்றி:
அந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 155/7 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 23/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு நடுவரிசையில் களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 51* (43) ரன்கள் விளாசி காப்பாற்றிய நிலையில் அவருடன் சூர்யகுமார் யாதவ் 32 (21) ரன்களும் ரித்திக் ஷாக்கீன் 25 (25) ரன்களும் எடுத்து உறுதுணையாக இருந்தனர். சென்னை சார்பில் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளையும் டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 156 என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு தொடக்க வீரர் ருதுராஜ் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து வந்த மிட்சேல் சாட்னர் 11 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இதனால் 16/2 என தடுமாற்ற தொடக்கத்தை பெற்ற சென்னைக்கு அடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா 30 (25) ரன்களும் அம்பத்தி ராயுடு 40 (35) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். ஆனால் அடுத்து வந்த ஷிவம் துபே 13 (14), கேப்டன் ரவீந்திர ஜடேஜா 3 (8) என சொற்ப ரன்களில் அவுட்டானதால் தோல்வியின் பிடியில் சென்னை வலுவாக சிக்கியது.

MS Dhoni Finisher

அந்த மோசமான தருணத்தில் களமிறங்கிய ட்வயன் பிரெடோரியஸ் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 22 (14) ரன்கள் எடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அதனால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி 4 பந்தில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது 6, 4, 2, 4 என மொத்தம் 3 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 28* (13) ரன்களை விளாசிய ஜாம்பவான் எம்எஸ் தோனி வெறித்தனமான பினிஷிங் செய்து சென்னைக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதனால் 7 போட்டிகளில் 2-வது வெற்றியை சென்னை பதிவு செய்தாலும் பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

- Advertisement -

டக்மேன் ரோஹித்:
மும்பையின் இந்த அடுத்தடுத்த தொடர் தோல்விகளுக்கு மோசமான பந்துவீச்சு, இஷான் கிசான், கிரண் பொல்லார்ட் போன்ற வீரர்கள் ரன்கள் எடுக்காதது என்பதையும் தாண்டி கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டில் ரன்கள் வராதது முக்கிய பங்காற்றியது. குறிப்பாக இந்த வாழ்வா சாவா போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அவர் முகேஷ் சவுத்ரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

Rohit

இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற படுமோசமான வரலாற்றுச் சாதனைக்கும் ரோகித் சர்மா சொந்தக்காரர் ஆகியுள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ரோஹித் சர்மா : 14* டக் அவுட்
2. பியூஸ் சாவ்லா, ஹர்பஜன்சிங், மந்தீப் சிங், பார்த்திவ் படேல், அம்பத்தி ராயுடு, அஜிங்கிய ரஹானே : தலா 13 டக் அவுட்

இதையும் படிங்க : பெங்களூரு, டெல்லி அணிகளை காட்டிலும் வரலாற்றில் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்த மும்பை – விவரம் இதோ

மேலும் பொதுவாகவே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் மற்றும் ஹிட்மேன் என பெயரெடுத்த ரோகித் சர்மா இந்த வருடம் 41, 10, 3, 26, 28, 6, 0 என 7 போட்டிகளில் 114 ரன்களை 16.28 என்ற மோசமான சராசரியில் எடுத்து மோசமான பார்மில் உள்ளார். அதைவிட அவரின் ஹிட்மேன் பெயருடன் நேற்றைய போட்டியில் டக் அவுட் சாதனை பட்டியலில் முதலிடம் பெற்றதால் டக்மேன் என்ற பெயரும் சேர்ந்து ஒட்டிக் கொண்டுள்ளது ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisement