ஐபிஎல் தொடரில் ஓய்வுக்கு பின் அதை வேலை செய்யப் போறேன்.. நாட்டுப்பற்றுடன் தோனி வெளியிட்ட அறிவிப்பு

MS Dhoni
- Advertisement -

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இந்தியாவுக்கு 2007 டி20 உலகக் கோப்பை 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த பெருமைக்குரியவர். அதே போல 2010இல் டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை நம்பர் ஒன் அணியாகவும் முன்னேற்றிய அவர் உலகிலேயே 3 விதமான வெள்ளைப் பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

மேலும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக செயல்பட்ட அவர் மிடில் ஆர்டரில் நிறைய போட்டிகளை வென்று கொடுத்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். அதே போல தற்போதைய விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் ஜாம்பவான்களாக உருவெடுப்பதற்கு அப்போதே வாய்ப்பு கொடுத்து வளர்த்த அவர் இந்திய கிரிக்கெட்டை வளமாக கட்டமைத்த பெருமைக்குரியவராக திகழ்கிறார்.

- Advertisement -

ஓய்வுக்குப் பின் பணி:
அந்த வகையில் மகத்தான வீரரான அவர் 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விடைபெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் கடந்த சீசனில் 41 வயதில் முழங்கால் வலியை தாண்டி அனைத்து வீரர்களையும் அபாரமாக வழிநடத்திய அவர் 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்தார்.

இந்நிலையில் சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற பின் என்ன செய்வீர்கள் என்று எம்எஸ் தோனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தோனி பதிலளித்தது பின்வருமாறு. “அதைப் பற்றி எப்போதும் நான் நினைத்ததில்லை. ஏனெனில் இப்போதும் நான் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். ஐபிஎல் தொடரில் இப்போதும் நான் விளையாடுகிறேன். எனவே கிரிக்கெட்டை முடித்த பின் என்ன செய்வேன் என்பதை பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்”

- Advertisement -

“இருப்பினும் ஓய்வுக்குப் பின் நான் ராணுவத்தில் இருக்க விரும்புகிறேன் என்பதை உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் கடந்த சில வருடங்களாக நான் அதை அதிகமாக செய்யவில்லை” என்று கூறினார். பொதுவாக கெளதம் கம்பீர் உட்பட ஓய்வு பெற்ற நிறைய வீரர்கள் வர்ணனையாளர் அல்லது பயிற்சியாளராக செயல்படுவது வழக்கமாகும். ஆனால் இவ்வளவு பெரிய அந்தஸ்து கொண்ட தோனி நாட்டுக்காக ராணுவத்தில் பணியாற்ற செல்ல இருக்கிறேன் என்று சொல்வது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கும் பதிலாக இருக்கிறது.

இதையும் படிங்க: தம்பி உன்ன மாதிரி டேலன்ட் தான் எங்களுக்கு வேனும்.. தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு மெடல் வழங்கி கவுரவித்த – இந்திய அணி

சொல்லப்போனால் இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் கௌரவ பதவியில் இருக்கும் அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே ஓய்வு கிடைத்த சமயங்களில் ஏற்கனவே பணியாற்றியுள்ளார். எனவே தம்முடைய மகள் பிறந்த போதும் நாடு தான் முக்கியம் என்று சொல்லி ஆஸ்திரேலியாவில் கடந்த உலக கோப்பையில் தொடர்ந்து விளையாடிய தோனி ஓய்வுக்குப் பின் ராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றினால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனலாம்.

Advertisement