இந்த வயசுலயும் இப்படி ஒரு சிறுத்தை வேகமா! பஞ்சாப் வீரரை ரன் அவுட் ஆக்கி – அசத்திய தல தோனி

Dhoni
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 11-ஆவது லீக் போட்டி பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி இம்முறை வெற்றி பெற்றே ஆக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இந்த போட்டியில் களம் இறங்கியுள்ளது.

அதேவேளையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வலுவான அணியாக முற்றிலுமாக மாறி மிக பலம் வாய்ந்த அணியாக திகழும் பஞ்சாப் அணி தங்களது ஆதிக்கத்தை சிஎஸ்கே அணியிடம் வெளிக்காட்ட இருக்கிறது. இதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி தற்போது முதல் இன்னிங்சை விளையாடி முடித்துள்ள பஞ்சாப் அணி ஆனது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

பரபரப்பான இந்த போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக லியாம் லிவிங்ஸ்டன் 60 ரன்களும், தவான் 33 ரன்களையும் குவித்து அசத்தினார்கள். இந்நிலையில் இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர்களான ராஜபக்சேவை சென்னை அணியின் விக்கெட் கீப்பர் தோனி ரன் அவுட் செய்த விதம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இளம் வீரர்களே கிரிக்கெட் களத்தில் சோர்வடைந்து தளர்ந்து போகும் வேளையில் 40 வயதாகும் தோனி இன்னமும் முழு உடல் தகுதியுடன் ஓடி வந்து மின்னல் வேகத்தில் அவர் ரன்அவுட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சென்னை அணி இந்த 3 மாற்றங்களை செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் – வல்லுநர்கள் கூறுவது என்ன?

ஒரு சில வீரர்களுக்கு வயது ஏற ஏற அவர்களது ஓட்டத்தில் வேகம் குறையும். ஆனால் தோனியின் ஓட்டம் இப்போதும் சிறுத்தை போல உள்ளது என இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement