தோனி கடைசியாக பி.சி.சி.ஐ யிடம் இருந்து பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா ? – அவருடைய முழு சொத்து மதிப்பு இதோ

dhoni
- Advertisement -

தற்போது வரை இந்திய அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் தோனி மிகவும் மதிப்பு மிக்கவர். அவர் சம்பாதித்ததும் பல நூறு கோடிகள் இருக்கும் .இந்திய அணிக்காக ஆடுவது, ஐபிஎல் தொடரில் ஆடுவது அதன் மூலம் கிடைக்கும் விளம்பரங்கள் என தோனி வருடா வருடம் பல நூறு கோடிகள் சம்பாதித்து வருகிறார்.

Dhoni

- Advertisement -

கடந்த 15 வருடங்களாக இந்திய அணிக்காக ஆடி வரும் தோனி தனக்கான ஒரு பிராண்ட் மதிப்பை உருவாக்கி தற்போது பலர் வியாபாரங்களை செய்து வருகிறார் . மேலும், பல நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராகவும் இருந்து கோடிகளில் சம்பாதித்து வருகிறார்.

இதில் சர்வதேச அளவில் தோனி டெஸ்ட் போட்டியில் ஒரு நாள் ஆட இவருக்கு 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டது தனிக்கதை. அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் ஆட 6 லட்சமும், டி20 போட்டியில் ஆட 3 லட்சமும் இவருக்கு சம்பளமாக பிசிசிஐ கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Dhoni-1

அதனை தாண்டி 2015-ம் வருடம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்து இருந்தார் தோனி. தொடர்ந்து அவர் வருமானம் குறைந்து கொண்டே வந்து தற்போது 2019ஆம் ஆண்டு 22 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார் .இந்த வருமானத்தின் பெரும்பகுதி ஐபிஎல் கிரிக்கெட் மற்றும் விளம்பரங்களின் மூலம் கிடைத்தவை ஆகும்.

- Advertisement -

இப்படி எல்லாம் சம்பாதித்த தோனியின் சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரை பொறுத்த வகையில் தோனி 2008 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு சீசனுக்கும் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பெற்று வருகிறார். இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து பார்க்க தோனியின் சம்பளம் தோனியின் சொத்து மதிப்பு அனைத்தையும் சேர்த்து 1000 கோடி ரூபாயை நெருங்குகிறது.

Dhoni

தோனியின் இந்த சொத்து மதிப்பு ஒருபக்கம் திகைக்க வைத்தாலும், விராட் கோலி விரைவாக பல கோடிகளை சம்பாதித்து திகைக்க வைக்கிறார். தற்போது கொரோனா ஓய்வில் இருக்கும்போது கூட கோடிகளில் சம்பாதித்து வருகிறார் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement