- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த இந்திய ஜாம்பவானை பாத்து வளந்தாலும்.. தோனி தான் என்னோட குரு மாதிரி.. கலீல் அஹ்மத் பேட்டி

ராஜஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் கலீல் அகமது கடந்த 2018 முதல் இந்திய அணிக்காக அவ்வப்போது விளையாடி வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் 2018 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அப்போதிலிருந்து இதுவரை அவர் 11 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

கடைசியாக கடந்த மாதம் நடைபெற்ற ஜிம்பாப்வே டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாஹீர் கானை பார்த்து தாம் வளர்ந்ததாக கலீல் அகமது கூறியுள்ளார். இருப்பினும் முன்னாள் கேப்டன் தோனி தான் தம்முடைய குரு என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

குரு தோனி:
மேலும் 2018 ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ரோஹித்துக்கு பதிலாக தோனி கேப்டனாக செயல்பட்டார். அப்போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய தம்மிடம் முதல் ஓவரை தோனி பந்து வீச சொன்னதாக கலீல் அஹ்மத் கூறியுள்ளார். அப்போது பதற்றத்தில் ஓடியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“மஹி பாய் என்னுடைய நண்பர் மட்டுமல்ல. பெரிய சகோதரர் மற்றும் என்னுடைய குரு. என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே நான் ஜஹீர் கானை பார்த்து வளர்ந்தேன். அதனால் நான் இந்தியாவுக்காக முதல் ஓவரை வீச விரும்பினேன். அதே போலவே ஆசிய கோப்பையில் மஹி பாய் என்னை முதல் ஓவரை வீசுமாறு கேட்டார். அப்போது அணி சந்திப்பிலிருந்து வேகமாக ஓடினேன்”

- Advertisement -

“அப்படி செய்தால் மஹி பாய் அந்த முடிவை கொஞ்சம் மாற்றிக் கொள்வாரா என்று நினைத்தேன். ஒருமுறை நாங்கள் நியூசிலாந்தில் இருந்தோம். அப்போது அவரிடம் நிறைய ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்தனர். அதை அவர் என்னிடம் கொடுத்தார். அந்த தருணத்தை சில ரசிகர்கள் புகைப்படமாக எடுத்தனர். அந்த தருணம் மறக்க முடியாததாக அமைந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: துலீப் கோப்பை இல்ல.. இந்திய அணிக்கு முன்பாக அந்த அணியில் தான் என்னோட கம்பேக் இருக்கும்.. ஷமி பேட்டி

இந்த நிலையில் அடுத்து நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் பும்ரா ஓய்வெடுக்க உள்ளார். அதனால் அவருடைய இடத்தில் அர்ஷ்தீப் சிங் அல்லது கலீல் அஹ்மது விளையாட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதே போல 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய மண்ணில் கலீல் அஹ்மத் விளையாடினால் சிறப்பாக செயல்படுவார் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -