சொன்னதை செய்யல. அவரை டீம்ல இருந்து தூக்கிடலாமா? – தோனியின் பேச்சால் பரபரப்பான சி.எஸ்.கே மீட்டிங்

Dhoni
- Advertisement -

இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய முதல் 4 போட்டிகளிலும் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்து இருந்தது. அதனை தொடர்ந்து பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5-வது லீக் போட்டியில் முதல்பாதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணியானது ஷிவம் துபே மற்றும் உத்தப்பா ஆகியோரது அதிரடி காரணமாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தது.

CSK vs RCB 2

- Advertisement -

இதன் காரணமாக இந்த 5-வது லீக் போட்டியில் தங்களது முதல் வெற்றியை ருசித்தது. இந்த சீசனின் முதல் நான்கு போட்டிகளில் சென்னை அணி தோற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட்டின் மோசமான பார்ம் பார்க்கப்பட்டது. ஏனெனில் முதல் மூன்று போட்டிகளிலும் 0,1,1 என்ற சொற்ப ரன்கள் குவித்த ருதுராஜ் 4-வது போட்டியிலும் 16 ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

எனவே பெங்களூரு அணிக்கு எதிரான இந்த போட்டி அவருக்கு ஒரு கடைசி வாய்ப்பாக கொடுக்கப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகத்தில் ஒரு மீட்டிங்கில் கூறப்பட்டது. அந்த மீட்டிங்கில் அவரும் தான் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் என்னை அணியிலிருந்து நீக்கிவிடுங்கள் என்றெல்லாம் பேசி இருந்தார் என்ற தகவலை கூட நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் இந்த பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் மீது நம்பிக்கை வைத்து களமிறக்கிய சென்னை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Ruturaj Gaikwad

ஏனெனில் அவர் அந்த இன்னிங்சை சிறப்பாக தொடங்கியிருந்தாலும் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் உத்தப்பா மற்றும் துபே ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக சென்னை அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு நடைபெற்ற சிஎஸ்கே மீட்டிங்கில் தோனி : ருத்ராஜ் கெய்க்வாட் சொன்னதை செய்யவில்லை அவரை டீமில் இருந்து நீக்கி விடலாமா? என்று சொல்லியிருக்கிறார். இதனால் அந்த மீட்டிங்கில் சற்று பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

அதன்பிறகு தொடர்ந்து பேசிய தோனி : பரவாயில்லை இந்த போட்டியில் நாம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெற்றுள்ளோம். அதனால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடலாம் என்று கூறியதும் அங்கிருந்த அனைவரும் சற்று மகிழ்ச்சியுடன் சிரித்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : எப்பா 18 வயசுலயே மெகா சிக்ஸர் அடித்து சாதனை படைத்த குட்டி ஏபிடி, தனி ஒருவனாக மிரட்டல் – வீடியோ இதோ

அவர் தொடர்ந்து சொதப்பினாலும் அவரை தக்கவைத்து அவரிடமிருந்து முறையான ஆட்டத்தை பெறலாம் என்ற நம்பிக்கையை சிஎஸ்கே அணி வைத்துள்ளதால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. அதேபோல் முதல் முறையாக இந்த சீசனில் கிடைத்துள்ள இந்த வெற்றியை அப்படியே தொடர வேண்டும் என்பதிலும் சிஎஸ்கே அணி நிர்வாகமும், வீரர்களும் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement