தோனி பர்த்டே ஸ்பெஷல்: இனிமே ஐ.பி.எல் தொடர்ல இப்படி ஒரு சாதனையை கேப்டனா படைக்க யாராலும் முடியாது – படிச்சா நீங்களும் ஆமானு சொல்லுவீங்க

CSKShop
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இந்த ஆண்டு 16-வது சீசனை அண்மையில் நிறைவு செய்தது. அப்படி நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதன்மூலம் இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றிருந்த மும்பை அணியின் சாதனையையும் சென்னை அணி சமன் செய்துள்ளது.

CSK vs GT

- Advertisement -

இந்த தொடரில் பங்கேற்று விளையாடிய சி.எஸ்.கே அணியின் கேப்டன் தல தோனி தனது கடைசி சீசனில் விளையாடுகிறார் என்று பேசப்பட்டதால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் சென்னை அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம் லட்சக்கணக்கில் குவிந்தனர். அதனால் இந்தியா முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியும், விசில்களும் பறந்தன.

தோனியும் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பிற்கும், பாசத்திற்கும் மரியாதை கொடுக்கும் வகையில் தான் மேலும் ஒரு ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடப்போவதாக அறிவித்தார். அதன் காரணமாக அடுத்த 2024-ஆம் ஆண்டும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் அதுவே அவரது கடைசி ஐ.பி.எல் தொடராகவும் அமைய வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் இன்று ஜூலை 7-ஆம் தேதி தோனி தனது 42-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Dhoni

இந்நிலையில் தோனியின் பிறந்தநாளான இன்று தோனி குறித்த பல்வேறு செய்திகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றனது. அந்த வகையில் கேப்டனாக தோனி படைத்துள்ள ஒரு ஐபிஎல் சாதனையை இனி எந்த ஒரு கேப்டனாலும் முறியடிக்க முடியாது என்ற ஒரு தகவலை நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

- Advertisement -

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கேப்டனாக கைப்பற்றிய தோனி அதிக வயதில் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனாக சாதனை படைத்துள்ளார். தற்போது 41 வயதை எட்டியுள்ள அவர் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அவரது இந்த சாதனையை இனிவரும் எந்த ஒரு கேப்டனாலும் முறியடிக்க முடியாது என்றே நாம் அடித்து கூறலாம்.

இதையும் படிங்க : சென்னையின் செல்லப்பிள்ளையான தல தோனி சேப்பாக்கத்தில் செய்துள்ள 5 தரமான சம்பவங்கள் – விவரம் இதோ

ஏனெனில் இப்போதெல்லாம் வீரர்கள் 35-36 வயதை எட்டினாலே அவர்களது பார்ம் மற்றும் வயது ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்களை அணிகள் வெளியேற்றி வரும் வேளையில் இனிவரும் காலங்களில் எந்த ஒரு வீரரும் 40 வயது வரை விளையாடுவது என்பதே கடினம். அப்படியே விளையாடினாலும் அவர்கள் அணியின் கேப்டனாக விளையாடுவது மிகவும் கடினம் என்பதால் தோனியின் இந்த சாதனையை யாராலும் உடைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement