ஃபிரண்ட்ஷிப் நம்பர் ஒன்.. இந்த பரிசு தான் எங்களோட நட்புக்கு இலக்கணம்.. தல தோனியின் நண்பர் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்க உள்ளது. அதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது. அந்த அணியை நட்சத்திர முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி வழி நடத்த உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்காக மூன்று விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த பெருமைக்குரிய அவர் கடந்த வருடம் 41 வயதிலும் லேசான முழங்கால் வலியையும் தாண்டி சிறப்பாக செயல்பட்டு சென்னை 5வது கோப்பையை வெல்ல உதவினார். அந்த வரிசையில் இந்த வருடம் சென்னைக்கு 6வது கோப்பையை வெல்வதற்கு தோனி தேவையான பயிற்சிகளை இப்போதே துவங்கியுள்ளார்.

- Advertisement -

நட்புக்கு இலக்கணம்:
அந்த பயிற்சியில் தன்னுடைய பேட்டில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் எனும் புதிய ஸ்டிக்கரை தோனி ஒட்டியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆரம்ப காலங்களில் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக பரம்ஜித் சிங் எனும் நண்பர் தோனிக்கு முக்கிய உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக தோனியின் பேட்டுக்கு முதல் முறையாக பரம்ஜித் சிங் தான் போராடி ஸ்பான்சர்ஷிப் பெற்றுக் கொடுத்தார்.

அந்த விவரத்தை 2016ஆம் ஆண்டு எம்எஸ் தோனி – தி அன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் ரசிகர்களால் பார்க்க முடியும். தற்போது பரம்ஜித் சிங் ராஞ்சியில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் எனும் பெயரில் விளையாட்டு உபகரணங்கள் கடையை நடத்தி வருகிறார். எனவே ஆரம்ப காலத்தில் தமக்கு நண்பன் செய்த உதவியை மறக்காத தோனி தற்போது அவருடைய கடையை பிரபலப்படுத்துவதற்காக ப்ரைம் ஸ்போர்ட்ஸ் ஸ்டிக்கரை தன்னுடைய பேட்டில் ஒட்டியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தன்னுடைய பேட்டுக்கு பல முன்னணி நிறுவனங்கள் பல கோடி ரூபாய்களுடன் ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் நண்பனுக்காக தோனி செய்துள்ள இந்த செயல் ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எப்போதுமே தமக்காக உதவி செய்ய காத்திருக்கும் தோனி நட்புக்கு இலக்கணமாக தன்னுடைய கடையின் பெயரை பேட்டில் பயன்படுத்தியுள்ளதாக பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரஹானே, புஜாராவே ஆடுறாங்க.. உங்களுக்கென்ன? இளம்வீரர்களை எச்சரித்த – ஆகாஷ் சோப்ரா

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனியால் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் எப்போதுமே எங்களுக்காக இருப்பார். இதுவே எங்களுடைய ஃப்ரெண்ட்ஷிப். நம்பர் ஒன் ஃப்ரண்ட்ஷிப். தோனி எனக்காக கையொப்பமிட்ட ஒரு பேட்டை கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக 2019 உலகக்கோப்பை சமயங்களில் பஸ், எஸ்எஸ் போன்ற ஆரம்ப காலங்களில் தமக்கு உதவிய ஸ்பான்சர்சிப் பெயர்களை நன்றி மறவாமல் தோனி தன்னுடைய பேட்டில் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement