ரஹானே, புஜாராவே ஆடுறாங்க.. உங்களுக்கென்ன? இளம்வீரர்களை எச்சரித்த – ஆகாஷ் சோப்ரா

Chopra
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை போட்டிகளானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களை தவிர்த்து இந்தியாவை சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளம் வீரர்கள் இந்த ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதின் மூலமாக அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்வார்கள் என்பதனால் தேர்வுக்குழுவினரும் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடும் சில வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி வருகின்றனர்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடி வரும் பல இளம் வீரர்கள் தேசிய அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் விளையாடி வருவதால் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயர், பாண்டியா சகோதரர்கள் போன்ற ஒரு சிலர் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை அளித்து ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் ரஞ்சி போட்டிகளில் விளையாடுவதை தவித்து வருகிறார். குறிப்பாக அண்மையில் மனசோர்வு காரணமாக இந்திய அணியில் இருந்து விலகிய அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்திய அணியில் அவர் இடம் பிடிக்க வேண்டுமெனில் ரஞ்சி தொடரில் விளையாடி தனது திறனை நிரூபிக்க வேண்டும் என்று இந்திய அணியின் நிர்வாக தரப்பிலும் இருந்தும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

ஆனால் இதுவரை ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடாமல் இருக்கும் அவர் பாண்டியா சகோதரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படி ரஞ்சி தொடரில் விளையாடாத எந்த ஒரு இளம் வீரருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கக்கூடாது என முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதால் ரஞ்சி தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ரஹானே, புஜாரா போன்ற ஜாம்பவான் வீரர்கள் கூட இந்திய அணியில் இடம் பெறாத வேளையில் ரஞ்சி தொடரில் இணைந்து விளையாடி வரும் வேளையில் இளம் வீரர்களும் அதனை செய்ய வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியா அளவிற்கு அந்த தமிழக வீரராலும் செமையா ஆடமுடியும் – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

தேசிய அணிக்கு தேர்வு செய்ய முக்கிய இடமாக பார்க்கப்படும் ரஞ்சி கோப்பையில் விளையாடாத எந்த ஒரு வீரரையும் தேர்வுக்குழு தேசிய அணிக்கு தேர்வு செய்யக்கூடாது அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து ரஞ்சி போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும் என்றும் இதுகுறித்து பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும் எனவும் ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement