ஹார்டிக் பாண்டியா அளவிற்கு அந்த தமிழக வீரராலும் செமையா ஆடமுடியும் – சுனில் கவாஸ்கர் நம்பிக்கை

Gavaskar-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது அடுத்த மாத இறுதியில் துவங்க உள்ளது. ஏற்கனவே 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த தொடர் இந்த ஆண்டும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்முறையும் 10 அணிகள் பங்கேற்க இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்ற பலமான போட்டி நிலவும் என்பதனால் தற்போதே இந்த தொடரின் மீதான சுவாரஸ்யம் அதிகரித்துள்ளது.

ஐபிஎல் தொடரினை பொறுத்தவரை மும்பை மற்றும் சென்னை ஆகிய அணிகள் பலமான அணிகளாக பார்க்கப்பட்டு வரும் வேளையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக ஆண்டிலேயே ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

அதோடு கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரிலும் இறுதிவரை சென்று சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இப்படி இரண்டு சீசன்களிலுமே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அந்த அணியில் இருந்து தற்போது நடப்பு ஆண்டிற்கான சீசனுக்கு முன்னர் அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா மும்பை அணிக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போது குஜராத் அணியில் பாண்டியாவின் இடத்தை நிரப்பப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அவருக்கு பதிலாக சில இளம் வீரர்களை அந்த அணி மினி ஏலத்தின் போது வாங்கியிருந்தாலும் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை பூர்த்தி செய்யப்போவது யார்? என்கிற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில் தலைமையில் பாண்டியாவின் இடத்தை நிச்சயம் தமிழக வீரர் விஜய் சங்கரால் நிரப்ப முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் இரண்டு ஆண்டுகளாக விளையாடி வரும் விஜய் சங்கர் அவரிடம் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டிருப்பார்.

இதையும் படிங்க : 139 ரன்ஸ்.. மிடில் ஆர்டரில் ஆஸியை துவம்சம் செய்த ரசல் – ரூதர்போர்ட் ஜோடி.. புதிய உலக சாதனை

ஒவ்வொரு போட்டியிலும் கடினமான சூழலில் எவ்வாறு பவுலிங் செய்ய வேண்டும் என்பதையும், எவ்வாறு பேட்டிங்கில் கை கொடுக்க வேண்டும் என்பதையும் விஜய் சங்கர் நிச்சயம் கற்றுக் கொண்டிருப்பார். பாண்டியாவின் அளவிற்கு விஜய் சங்கரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் 80 சதவீத தாக்கத்தை கொடுத்தாலே போதுமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிச்சயம் விஜய் சங்கரால் அதை செய்ய முடியும் என சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement