139 ரன்ஸ்.. மிடில் ஆர்டரில் ஆஸியை துவம்சம் செய்த ரசல் – ரூதர்போர்ட் ஜோடி.. புதிய உலக சாதனை

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. அதில் முதலிரண்டு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலையில் இத்தொடரின் கடைசி போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜான்சன் சார்லஸ் 4, கெய்ல் மேயர்ஸ் 11, நிக்கோலஸ் பூரான் 1, ராஸ்டன் சேஸ் 37, ரோவ்மன் போவல் 21 என முக்கிய வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 79/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்கள் கூட தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

சாதனை ஜோடி:
ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த செர்ஃபென் ரூதர்போர்ட் – ஆண்ட்ரே ரசல் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக ஒன்பதாவது ஓவரில் சேர்ந்த இவர்கள் கடைசி ஓவர் வரை அடுத்த நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 6வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை முழுமையாக மீட்டனர்.

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 6வது விக்கெட்டுக்கு அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடி என்ற உலக சாதனையையும் ஆண்ட்ரே ரசல் – செர்ஃபென் ரூதர்போர்ட் படைத்தனர். இதற்கு முன் கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் பப்புவா நியூ கினியா அணியின் டி உரா – என் வனுவா 6 விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அதில் ஆண்ட்ரே ரசல் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 71 (29) ரன்களும் ரூதர்போர்ட் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 67* (40) ரன்களும் எடுத்தனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 220/6 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக சேவியர் பார்லெட் 2 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 221 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒருபுறம் டேவிட் வார்னர் அதிரடியாக 81 (49) ரன்கள் குவித்து போராடினார்.

இதையும் படிங்க: 79/5 டூ 220/6.. ஆஸியை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய வெ.இ.. 11 வருடத்துக்கு பின் மிரட்டல் வெற்றி

ஆனால் எதிர்புறம் டிம் டேவிட் 41* (19) ரன்கள் எடுத்ததை தவிர்த்து மிட்சேல் மார்ஷ் 17, ஆரோன் ஹார்டி 16, ஜோஸ் இங்லிஷ் 1, மேக்ஸ்வெல் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியாவை 183/5 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக செஃபார்ட் 2, ராஸ்டன் சேஸ் 2 விக்கெட்களை எடுத்தனர். அதன் காரணமாக ஆஸ்திரேலியா 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றியை பெற்றது.

Advertisement