79/5 டூ 220/6.. ஆஸியை அதன் சொந்த மண்ணில் அடித்து நொறுக்கிய வெ.இ.. 11 வருடத்துக்கு பின் மிரட்டல் வெற்றி

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் தங்களுடைய சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாயக் கடைசிப் போட்டி பிப்ரவரி 13ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு துவக்க வீரர்கள் ஜான்சன் சார்லஸ் 4, கெய்ல் மேயர்ஸ் 11 ரன்களில் சேவியர் பார்லேட் வேகத்தில் அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரானும் 1 ரன்னில் அவுட்டானதால 17/3 என ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது.

- Advertisement -

மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ்:
அப்போது மிடில் ஆடரில் அதிரடியாக விளையாட முயற்சித்த ராஸ்டன் சேஸ் 37 (20) கேப்டன் ரோவ்மன் போவல் 21 (14) ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 79/5 என மேலும் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த செர்பேன் ரூதர்போர்ட் – ஆண்ட்ரே ரசல் ஆகியோர் ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கி அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

9வது ஓவரில் இணைந்த இவர்கள் மிடில் ஓவர்கள் முழுவதும் ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒவ்வொரு ஓவருக்கும் 10க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தனர். அந்த வகையில் அரை சதம் கடந்த இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை முழுமையாக மீட்டெடுத்த போது ஆண்ட்ரே ரசல் 4 பவுண்டரி 7 சிக்ஸருடன் 71 (29) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய ரூதர்போர்ட் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 67* (40) ரன்கள் குவித்தார். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 220/6 ரன்கள் குவித்த நிலையில் ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக சேவியர் பார்லர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 221 என்ற கடினமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் கேப்டன் மிட்சேல் மார்ஷ் 17, ஆரோன் ஹார்டி 16 ரன்களில் அவுட்டானார்கள்.

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 9 பவுண்டரி 3 சிக்சருடன் அரை சதமடித்து 81 (49) ரன்கள் குவித்து முடிந்தளவுக்கு போராடிய அவுட்டானார். அப்போது வந்த ஜோஸ் இங்லீஷ் 1, கிளன் மேக்ஸ்வெல் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதியில் டிம் டேவிட் சரவெடியாக 2 பவுண்டரி 4 சிக்சருடன் 41* (19) ரன்கள் எடுத்துப் போராடினார்.

இதையும் படிங்க: வீக்னெஸ் இல்லாத அவரிடம் ஈகோவுடன் விளையாடி அவுட்டாக்குங்க.. இங்கிலாந்துக்கு டேவிட் லாய்ட் அட்வைஸ்

ஆனாலும் 20 ஓவரில் ஆஸ்திரேலியாவை 183/5 ரன்களுக்கு கட்டுப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன் வாயிலாக 11 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு டி20 போட்டியில் வென்று வெஸ்ட் இண்டீஸ் அசத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு பிரிஸ்பேன் நகரில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்திருந்த அந்த அணி 2 – 1 என்ற கணக்கில் இந்த வெற்றியால் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்தது.

Advertisement