ஐபிஎல் 2024 : கேப்டன்ஷிப் பதவியில் விலகுகிறாரா தல தோனி? பேஸ்புக் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

MS Dhoni CSK.jpeg
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்க வரும் ஐபிஎல் 2024 டி20 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இம்முறை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 முதல் சென்னை அணிக்காகவும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதில் மிகச்சிறந்த விக்கெட் கீப்பராகவும் ஃபினிஷராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு வரும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

பேஸ்புக் பதிவு:
இருப்பினும் தற்போது 41 வயதை தொட்டுள்ள அவர் கடந்த வருடமே முழங்கால் வலியால் அவதிப்பட்டார். அதன் காரணமாக கடைசி நேரத்தில் மட்டுமே பேட்டிங் செய்வதற்காக களமிறங்கிய அவர் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டனாக மட்டும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியில் பங்காற்றினார். அதன் காரணமாக வழக்கம் போல இந்த வருடத்துடன் அவர் ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சற்று முன் தோனி வெளியிட்டுள்ள பதிவு பின்வருமாறு. “புதிய சீசனில் புதிய வேலைக்காக காத்திருக்க முடியவில்லை. தொடர்ந்து காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார். பொதுவாகவே மற்ற வீரர்களைப் போல் சமூக வலைதளப் பக்கங்களில் அதிகம் தலைக் காட்டாத தோனி தற்போது ஐபிஎல் துவங்குவதற்கு 20 நாட்கள் கூட இல்லாத நிலையில் வெளியிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

குறிப்பாக 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது முதலே ஐபிஎல் தொடரிலும் தோனி எப்போது வேண்டுமானாலும் விடை பெறலாம் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது. அதே சமயம் தன்னைத் தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்களுக்காக தன்னுடைய கேரியரின் கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று ஏற்கனவே தோனி உறுதியாக தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: 109 ரன்ஸ் 4 விக்கெட்ஸ்.. 48வது முறை.. தூளான தமிழ்நாடு அணியின் 36 வருட கனவு.. ஃபைனலுக்கு சென்ற மும்பை

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வருடத்தின் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. எனவே தம்முடைய கேப்டன்ஷிப் பதவியை மற்ற வீரரிடம் சென்னையின் ஆலோசகராக செயல்படும் வேலையை தோனி கையில் எடுக்க உள்ளாரா? என்ற குழப்பம் தற்போது அவருடைய பேஸ்புக் பதிவால் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் ஏற்கனவே ஜடேஜா கேப்டன்ஷிப் பதவியில் தடுமாறினார் என்பதால் ருதுராஜ் கைக்வாட் கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement