நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடிய போட்டியில் சென்னை அணியின் கூல் கேப்டன் தோனி தனது கூல் தன்மையை இழந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் விரலாக பரவி வருகிறது.
இந்த போட்டியில் 176 ரன்களை எடுத்தும் சென்னை அணி தோல்வியை தழுவியது ரசிகர்களை ஏமாற்றமடையா செய்தது. இந்த போட்டியில் ஒரு கட்டத்தில் 18 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்திருந்தது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தால் என்ற நிலையில் விளையாடி வந்தது ராஜஸ்தான் அணி.
வெற்றி வாய்ப்பு சென்னை பக்கம் இருந்த நிலையில் 19 வது ஓவரை வீசிய டேவிட் வில்லே 1 விக்கெட்டை கைப்பற்றி 16 ரன்களை கொடுத்தார். இந்நிலையில் கடைசி ஒவேரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடி வந்தது ராஜஸ்தான் அணி. இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசுய பிராவோவின் பந்தை எதிகொண்ட பட்லர் முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்கவில்லை.
A nail biting finish here in Jaipur as the @rajasthanroyals beat #CSK by 4 wickets in a must win game.#RRvCSK pic.twitter.com/ha9LBtqNUx
— IndianPremierLeague (@IPL) May 11, 2018
பின்னர் வீசிய4 பந்துகளில் 2, 2 ,6 , 2 என்று விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இதனால் கேப்டன் கூல் தோனியின் முகம் மிகவும் வாடியது.