- Advertisement -
ஐ.பி.எல்

13 வருட ஐ.பி.எல் வரலாற்றில் தோனி இந்த பவுலருக்கு எதிரா ஒரு பவுண்டரி கூட அடிச்சதில்லையாம் – விவரம் இதோ

தோனிக்கு வயதாகிவிட்டதால் செய்யும்போது காலமாக அவரால் அதிரடியாக ஆட முடியவில்லை என்ற ஒரு விமர்சனம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் ஒருசில பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் சுத்தமாக ஆடுவதே இல்லை என்ற தகவல்களும் தற்போது வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.

அந்த போட்டியில் கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்ள தோனி தடுமாறினார் என்ற தகவல் நமக்கு வந்து திடுக்கிட வைத்துள்ளது. இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார். மொத்தமாக 59 முறை தோனி சுனில் நரைன் பந்துகளை எதிர்கொண்டு இருக்கிறார் இதில் மொத்தம் 21 ரன்கள்தான் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஒருமுறை அவரிடம் தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு பவுண்டரி கூட அவரது பந்தில் அடித்ததில்லை ஸ்ட்ரைக் ரேட் வெறும் 50 தான். இந்நிலையில் தோனி ஏன் இவரது பந்தில் ஆட முடியவில்லை என்பது குறித்து பேசியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில்…

தோனி பின்னால் சென்று கட் ஷார்ட் ஆடக் கூடியவர் இல்லை. இறங்கி வந்து சிக்ஸர் அடிப்பதையும் விட்டுவிட்டார். சுனில் நரேன் ஓவரில் பவுண்டரி அடிக்க வேண்டும் என்றால் ஸ்வீப் ஷாட் ஆட வேண்டும். இந்த மூன்றும் இல்லாமல் சுனில் நரைன் பந்தை ஆட முடியாது. மேலும் டோனி யார் சுழற் பந்து வீசினாலும் உடனடியாக தனது இடதுகாலை முழு நீளத்திற்கு நீட்டுகிறார்.

இப்படி நீட்டி விட்டால் பந்தை கட்டை(டொக்) தான் வைக்க முடியும். இது தான் தோனி செய்யும் தவறு இதனால்தான் அவரது பந்தை தோனியால் அடித்து ஆட முடியவில்லை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.

- Advertisement -
Published by