- Advertisement -
ஐ.பி.எல்

டீம் மீட்டிங் அப்போ சுனில் நரேன் மட்டும் வரவே மாட்டாரு.. நானும் கூப்பிடறது இல்ல.. வெற்றிக்கு பிறகு – ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே குதித்தது. டெல்லி சார்பாக அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்களையும், ரிஷப் பண்ட் 27 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 157 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது கொல்கத்தா அணி சார்பாக பில் சால்ட் 68 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களையும் குவித்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் : கடந்த சில போட்டிகளை பார்க்கும் வகையில் 200 ரன்கள் என்பது சாதாரண இலக்காக இருக்கிறது. எனவே இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் கட்டுக்கோப்புடன் செயல்பட நினைத்தோம். அதன்படி பவர்பிளேவுக்கு பிறகு ஸ்பின்னர்களுக்கு மைதானம் நன்றாக உதவியது. அதனை பயன்படுத்தி எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி அணியை தடுத்து நிறுத்தினர்.

- Advertisement -

பின்னர் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை செயல்படுத்தவே எளிதாக எங்களால் வெற்றியை கடக்க முடிந்தது. எங்களது டீமிற்குள் பேட்ஸ்மேன்கள் மீட்டிங் நடைபெற்றால் அதற்கு சுனில் நரேன் வருவது கிடையாது. பில் சால்ட் மட்டும் அனைத்து மீட்டிங்கிற்கும் வந்து தனது ஆலோசனைகளையும் கூறுவார். ஆனால் சுனில் நரேன் மீட்டிங்க்கு வருவதும் கிடையாது நான் அவரை அழைப்பதும் கிடையாது. அதேபோன்று இந்த போட்டியில் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : பயப்படுறவங்களுக்கு என்னோட ரிஸ்க் செட்டாகாது.. சுனில் நரேன் அதிகம் பேசமாட்டாரு.. பில் சால்ட் பேட்டி

கடந்த சில போட்டிகளாகவே அவரிடம் இருந்து பெஸ்ட் வரவில்லை என்றாலும் இந்த போட்டியில் மைதானத்தின் தன்மையை அறிந்து மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி மீண்டும் அவரது தரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். நாங்கள் எந்த இடத்தில் எல்லாம் சின்ன சின்ன தவறுகளை செய்திருந்தோமோ அதனை சரி செய்து தற்போது பலமாக மாறி வருகிறோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -