- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னர் தோனி எடுத்துள்ள புதிய முடிவு – அணியின் நன்மைக்காக தான் எல்லாம்

கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் அடுத்து சீசனில் விளையாடுவதாக கூறி 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி பங்கேற்று விளையாடினார்.

நடைபெற்று முடிந்த இந்த ஆண்டு சீசனில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேற நிலையில் தோனி ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி இந்த தொடர் முடிந்தும் ஓய்வு குறித்து எதுவும் பேசாமல் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

- Advertisement -

அதோடு தற்போது 43 வயதாகும் தோனிக்கு அடுத்த சீசன் கட்டாயம் இறுதி சீசனாக இருக்கும் என்று தெரிகிறது. அதற்குள் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலமும் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஐந்து வீரர்களை அணியில் தக்க வைக்கவும் மூன்று வீரர்களை “ரைட் டூ மேட்ச் கார்டு” மூலமாகவும் தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் அப்படி வைத்தால் மட்டுமே முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொண்டு தோனியையும் அணியில் வைத்திருக்க முடியும். இந்நிலையில் தற்போது 43 வயதாகும் தோனி அடுத்த ஆண்டு உறுதியாக விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ள வேளையில் சிஎஸ்கே அணிக்காக ஒரு மிகப்பெரிய தியாகத்தை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த ஐபிஎல் ஏலத்தின் போது தனக்கு கொடுக்கப்பட்ட பெரிய தொகையை குறைத்துக் கொண்டு தன்னை குறைந்த சம்பளம் வாங்கும் வீரராக மாற்றிக் கொண்ட தோனி ஜடேஜாவிற்கு அதிக சம்பளத்தை விட்டுக்கொடுத்த. இம்முறை மெகா ஏலத்திற்கு முன்னதாக சர்வதேச போட்டியில் விளையாடாத வீரராக அதாவது “அன் கேப்டு வீரராக” தன்னை கருத்தில் கொண்டு தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள தோனி முடிவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : இந்த திட்டத்தை வெச்சு தான் ரோஹித்தை அவுட்டாக்குனேன்.. அவங்க 2 பேரும் முடிச்சுட்டாங்க.. வெல்லலாகே பேட்டி

இதன் மூலம் சென்னை அணி அவரை குறைந்த தொகைக்கு தக்கவைத்து கொள்ள முடியும். அதனால் மிச்சமாகும் பெரிய தொகை வைத்து மற்ற இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்பதால் தோனி தனது சம்பளத்தை பல மடங்கு குறைத்துக் கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஐ.பி.எல் நிர்வாகம் அதற்கு பச்சைக்கொடி காட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

- Advertisement -