இந்த திட்டத்தை வெச்சு தான் ரோஹித்தை அவுட்டாக்குனேன்.. அவங்க 2 பேரும் முடிச்சுட்டாங்க.. வெல்லலாகே பேட்டி

Wellalage 2
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடி வருகிறது. ஜூலை இரண்டாம் தேதி துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டி இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் அடித்தது.

அதன் பின் சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடிய 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மறுபக்கம் விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல் ஆகியோர் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதே போல கடைசி நேரத்தில் போராடிய சிவம் துபேவும் ஃபினிஷிங் செய்யாமல் அவுட்டானார்.

- Advertisement -

இலங்கையின் நாயகன்:
இறுதியில் 1 ரன் தேவைப்பட்ட போது சிக்ஸர் அடிக்க முயற்சித்த அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்தார். அதனால் இந்தியாவிடம் சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்தியுள்ள இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டது. அந்த அணியின் 21 வயதாகும் இளம் வீரர் துணித் வெல்லலாகே 67* (65) ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்து இப்போட்டியை இலங்கை சமன் செய்வதற்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

குறிப்பாக 75 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியாவின் சரிவுக்கு அடித்தளமிட்டார். இந்நிலையில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்தி ரோகித் சர்மாவை அவுட்டாக்கியதாக வெல்லலாகே தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்தோம்”

- Advertisement -

“எனவே பவர் பிளேவில் பந்து வீசுமாறு கேப்டன் அசலங்கா என்னிடம் சொன்னார். எனக்கும் பிட்ச்சில் நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக ரோகித் சர்மா பேட்டிங் செய்த நேரத்தில் நான் விக்கெட் டூ விக்கெட் பந்து வீசினேன். ஏனெனில் பிட்ச்சில் உதவி இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதே போல ஹசரங்கா மற்றும் அசலங்கா ஆகியோர் கடினமான நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்தனர். அக்சர் படேல், கேஎல் ராகுல் ஆகியோர் நிறைய போட்டிகளை ஃபினிஷிங் செய்துள்ளனர்”

இதையும் படிங்க: ரோஹித் செய்த ஒரு தவறால் வெற்றி நழுவிடுச்சு.. அவருக்கு பவுலிங் கொடுத்திருக்கக் கூடாது.. ஆகாஷ் சோப்ரா

“அப்படிப்பட்ட அவர்களில் அக்சர் பட்டேலை கேப்டன் அசலங்கா அவுட்டாக்கினார். கேஎல் ராகுலை முக்கிய நேரத்தில் ஹசரங்கா அவுட்டாக்கினார். அழுத்தமான நேரங்களில் நாங்கள் அமைதியாக இருந்ததால் போட்டி எங்கள் பக்கம் திரும்பியது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement