இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் போட்டி சமனில் முடிந்தது.
இத்தனைக்கும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்ததால் இந்தியா 75/0 என்ற வலுவான துவக்கத்தை பெற்றது. ஆனால் எதிர்புறம் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்த தவறினார். அதே போல கடைசியில் சிவம் துபே ஃபினிஷிங் செய்யத் தவறிய நிலையில் அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி வெற்றியை தாரை வார்த்தார்.
வெற்றி பறிபோக காரணம்:
இந்நிலையில் அப்போட்டியில் 1 ஓவர் வீசிய சுப்மன் கில் 14 ரன்கள் வழங்கியது இந்தியா வெற்றியை பறிகொடுக்க காரணமாக அமைந்ததாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இலங்கை அந்த ஓவரை பயன்படுத்தியே வேகத்தை பெற்றதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
அந்த ஓவரை சுப்மன் கில் வீசாமல் இருந்திருந்தால் இலங்கை 200 ரன்கள் கூட தாண்டியிருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே கில்லிடம் அந்த ஓவரை வழங்கி கேப்டன் ரோஹித் தவறு செய்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒரு தவறு தான் வேகத்தை இலங்கை பக்கம் கொண்டு சென்றது. சுப்மன் கில் வீசிய ஓவரில் 14 ரன்கள் அடிக்கப்பட்டது. அதை ஏன் இந்தியா செய்தது? என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது”
“ஏனெனில் அதன் காரணமாக ஒருகால் பின்னே வைத்த இந்தியா இது எளிதான வேலை என்று சொன்னது. ஆனால் இலங்கை 150 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியிருக்க வேண்டும். இல்லையென்றால் கூட இலங்கை 170 – 190 ரன்கள் தாண்டியிருக்கக் கூடாது. அதை செய்யாமல் இருந்திருந்தால் இலங்கை 50 ஓவர்களே விளையாடியிருக்காது. அதன் காரணமாக கடைசியில் இந்தியா 230 ரன்களை சேசிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது” என்று கூறினார்.
இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சனை.. தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டுவந்த – சூரியகுமார் யாதவ்
மொத்தத்தில் எளிதாக வெல்ல வேண்டிய போட்டியில் இந்தியா வெற்றியை நழுவ விட்டது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. மறுபுறம் இந்தியாவிடம் சந்தித்த தொடர் தோல்விகளை நிறுத்தி இலங்கை நிம்மதி பெருமூச்சு விட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.