24 கேரட் தங்கம் மாதிரி ரோஹித் அடித்து நொறுக்கிய அதே பிட்ச்சில் இப்படியா ஆடுவீங்க.. ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

Aakash Chopra
- Advertisement -

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றியை தவற விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்பு நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் குவித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.

அதனால் 75/0 என்ற வலுவான துவக்கத்தை பெற்ற இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புறம் கில் 16, விராட் கோலி 24, ஸ்ரேயாஸ் ஐயர் 23, ராகுல் 31, அக்சர் படேல் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல கடைசியில் அதிரடியாக விளையாடிய சிவம் துபே வெற்றியை நெருங்கியும் ஃபினிஷிங் செய்யாமல் 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

24 கேரட் தங்கம்:
அதை விட கடைசியில் ஒரு விக்கெட் மட்டுமே கையில் வைத்திருந்த இந்தியாவுக்கு கடைசி 14 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது சிங்கிள் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அர்ஷ்தீப் சிங் அதிரடியாக விளையாட முயற்சித்து டக் அவுட்டாகி இந்தியாவின் வெற்றியை கோட்டை விட்டார். அதனால் அவர் தான் வெற்றி பறிபோக காரணம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் ரோஹித் சர்மா 24 கேரட் தங்கம் போல அட்டகாசமாக விளையாடியதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். ஆனால் அதே பிட்ச்சில் அதே பவுலர்களுக்கு எதிராக அதே பவர்பிளே ஓவர்களில் திணறிய சுப்மன் கில் 16 (35) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். குறிப்பாக அவருடைய 45.71 என்ற ஸ்ட்ரைக் ரேட் மற்ற அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களை விட மிகவும் குறைவானதாகும்.

- Advertisement -

அந்த வகையில் பேட்டிங்கில் சுப்மன் கில் வெற்றி பறிபோக காரணம் என்று தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் ரன்கள் அடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தாலும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் 24 கேரட் தங்கத்திற்கு தகுதியானதாக இருக்கும். ஏனெனில் ஆரம்பத்திலேயே அவர் எதிரணித் திட்டங்களை தாக்கி தடம் புரள வைக்கிறார்”

இதையும் படிங்க: சி.எஸ்.கே அணிக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சனை.. தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டுவந்த – சூரியகுமார் யாதவ்

“ரோஹித் சூப்பர் வேகத்தில் பேட்டிங் செய்தார். ஆனால் அதே பிட்ச்சில் அதே பவுலர்களுக்கு எதிராக சுப்மன் கில் இப்படி விளையாடினார். அவர் விக்கெட்டை விட்டு விடக்கூடாது என்று மிகவும் கவனத்துடன் விளையாடினார். அவருடைய ஆட்டம் பெரும்பாலும் இப்படித் தான் இருக்கிறது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.

Advertisement