சி.எஸ்.கே அணிக்கு எதிராக ஏற்பட்ட பிரச்சனை.. தற்போது 9 ஆண்டுகள் கழித்து மீண்டுவந்த – சூரியகுமார் யாதவ்

SKY
- Advertisement -

அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளையில் ஹார்டிக் பாண்டியாவே பெரும்பாலும் டி20 அணியின் கேப்டனாக இருப்பார் என்று பலரது மத்தியிலும் பேசப்பட்டது. ஆனால் ஹார்டிக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை சூழல் காரணமாக தற்போது அவரை கேப்டனாக்க வேண்டாம் என்று நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்காரணமாக இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணியுடன் பயணிக்க இருக்கும் சூரியகுமார் யாதவை டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அப்படி நியமித்த பிறகு இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்றுக்கும் பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட கௌதம் கம்பீர் பேட்ஸ்மேன்களும் பந்துவீச வேண்டும் என்பதற்காக தனி பயிற்சிகளையும் போட்டியின் போது அவருக்கு ஒரு சில ஓவர்களையும் வீச வாய்ப்பையும் வழங்கி இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது மிக முக்கியமான 19-வது மற்றும் 20-வது ஓவரை ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் வீசினர்.

இலங்கை அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் 19-வது மற்றும் 20-வது ஆகிய 2 ஓவர்களிலும் இருவருமே தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றதோடு மட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தனர். இந்நிலையில் தற்போது சூரியகுமார் யாதவ் மீண்டும் பந்துவீச துவங்கியுள்ள வேளையில் அவர் பந்து வீசுவது குறித்த சுவாரசிய தங்கள் ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டியின் போது சிஎஸ்கே அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வீரராக பந்துவீசிய சூரியகுமார் யாதவ் அந்த போட்டியின் போது இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். அந்த இரண்டு ஓவர்களையும் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் எதிர் கொண்டிருந்தனர். இருப்பினும் அந்த போட்டி முடிந்த அவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.

இதையும் படிங்க : அந்த 1 ஓவர் தான் இந்தியாவின் வெற்றி பறிபோக காரணம்.. கம்பீர், ரோஹித்துக்கு அஜய் ஜடேஜா அட்வைஸ்

அதோடு 2 நடுவர்களும் ஆலோசித்து அவரது முழங்கை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக வளைந்து பந்துவீசுவதை கண்டுபிடித்தார்கள். மேலும் அவர் சந்தேகத்திற்குரிய முறையில் பந்துவீசும் பந்துவீச்சாளர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பகுதிநேர பந்துவீச்சாளராக பயிற்சி செய்து வரும் சூரியகுமார் யாதவ் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement