166 ரன்ஸ்.. தல தோனி உடைக்க முடியாத ஐபிஎல் வரலாற்று சாதனை.. லக்னோவை அடக்கிய சிஎஸ்கே வெல்லுமா?

LSG vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. சென்னை அணியில் டேவோன் கான்வே, அஸ்வின் அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அந்த நிலைமையில் ஆட்டத்தை துவங்கிய லக்னோ அணிக்கு கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே ஐடன் மார்க்கம் 6 ரன்னில் ராகுல் திரிபாதி அபார கேட்ச்சால் விக்கெட்டை இழந்தார்.

அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் மோசமான ஃபார்மில் இருக்கும் சென்னையை அடித்து நொறுக்கி ஓட விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு எதிராக அபாரமாக பௌலிங் செய்த சென்னை அணியின் அன்சுல் கம்போஜ் 8 (9) ரன்னில் அவுட்டாக்கி மிரட்டினார். அதனால் 23/2 என ஆரம்பத்திலேயே லக்னோ தடுமாறியது.

- Advertisement -

தல தோனியின் சாதனை:

அப்போது வந்த கேப்டன் ரிஷப் பண்ட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். மறுபுறம் தடுமாறிய மிட்சேல் மார்ஷ் 30 (25) ரன்னில் ஜடேஜா சுழலில் போல்டானார். அதே போல அடுத்ததாக வந்த ஆயுஸ் படோனி அதிரடியாக விளையாட முயற்சித்த போது 22 (17) ரன்னில் ஜடேஜா சுழலில் தோனியிடம் ஸ்டம்பிங் ஆனார்.

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி கீப்பராக கேட்ச், ஸ்டம்பிங் உட்பட மொத்தம் 200 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் எடுக்க உதவிய முதல் விக்கெட் கீப்பர் என்ற வரலாற்று சாதனையை தோனி படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கடந்த வருடத்துடன் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் 182 விக்கெட்டுகளுடன் உள்ளார்.

- Advertisement -

சென்னை வெல்லுமா:

சொல்லப்போனால் அந்தப் பட்டியலில் அடுத்த 3 இடங்களில் ஏபி டீ வில்லியர்ஸ் (126), ராபின் உத்தப்பா (124), சஹா (118) என ஓய்வு பெற்ற விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். அதனால் யாராலும் எளிதில் உடைக்க முடியாத சாதனையை தோனி படைத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: ரவிச்சந்திரன் அஷ்வினை நீக்கிவிட்டு ஜேமி ஓவர்டன்னை அணிக்குள் கொண்டு வந்தது ஏன்? – தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அசத்திய ரிஷப் பண்ட் அரை சதத்தை அடித்தார். அவருடன் சேர்ந்த அப்துல் சமத் அதிரடியாக 20 (11) ரன்கள் எடுத்தார். இறுதியில் ரிஷப் பண்ட் 63 (49) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் லக்னோ 166/7 ரன்களை எடுத்தது சென்னைக்கு அதிகபட்சமாக பதிரனா 3, ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த வகையில் லக்னோவை பவுலிங் துறையில் ஓரளவு நன்றாக செயல்பட்டு சென்னை அடக்கியுள்ளது. ஆனால் தற்சமயத்தில் சென்னை பேட்ஸ்மேன்கள் மோசமான ஃபார்மில் இருப்பதால் இந்த இலக்கை சேசிங் செய்யுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Advertisement