ரவிச்சந்திரன் அஷ்வினை நீக்கிவிட்டு ஜேமி ஓவர்டன்னை அணிக்குள் கொண்டு வந்தது ஏன்? – தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்

Ashwin
- Advertisement -

நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தாங்கள் விளையாடிய முதல் 6 போட்டிகளின் முடிவில் 5 தோல்விகளை தழுவி புள்ளிபட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. ஏற்கனவே சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியேறிய வேளையில் தற்போது புதிய கேப்டனாக தோனி செயல்பட்டு வரும் நிலையில் அனைத்தும் மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரவிச்சந்திரன் அஷ்வின் கழட்டி விடப்பட்டது ஏன்? :

ஆனால் தோனியின் தலைமையிலும் சென்னை அணி தடுமாற்றத்தை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தோனி தலைமையிலான சென்னை அணி கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக படுமோசமான தோல்வியை சந்தித்தது. அதற்கடுத்து தற்போது ஏப்ரல் 14-ஆம் தேதி இன்று லக்னோ அணிக்கு எதிராக தங்களது 7-ஆவது லீக் போட்டியில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது லக்னோ அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணியின் சார்பில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அந்த வகையில் டேவான் கான்வே வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஷேக் ரஷீத்திற்கும், அஸ்வின் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ஜேமி ஓவர்டன்னுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை திடீரென அணியில் இருந்து நீக்க என்ன காரணம்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் அஸ்வின் நீக்கத்திற்கான ஒரு சில காரணங்களும் இருக்கின்றன. அந்த காரணங்களை இங்கு காணலாம். இந்த தொடரின் முதல் 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஓவருக்கு 9.90 ரன்களை விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி வெறும் 5 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறார். அதனால் அவரது பௌலிங் ஃபார்ம் சற்று மந்தமாக உள்ளது தெளிவாக தெரிகிறது.

இதையும் படிங்க : கான்வே, அஸ்வினை தூக்கிய தோனி.. லக்னோ போட்டியில் சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள் செய்து பேட்டி

அதேபோன்று போட்டி நடைபெறும் லக்னோ மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனால் ஏற்கனவே 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கையில் மூன்றாவதாக அவருக்கு பதிலாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதனால் தான் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுக்காகவே இந்த மாற்றங்களை தோனி நிகழ்த்தியிருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement