IPL 2023 : இம்பேக்ட் விதிமுறை யூஸ் பண்ணி இன்னும் 5 வருஷம் விளையாடுங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு யூசுப் பதான் கோரிக்கை

yusuf
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரின் லீக் சுற்ற உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லிக்கு எதிராக இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்புடன் போராடி வருகிறது. முன்னதாக இந்தியாவுக்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து வரலாற்றின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாக சாதனை படைத்த தோனி ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டுமே 4 கோப்பைகளை வென்று கொடுத்த சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதனால் வருடத்தில் ஒருமுறை மட்டுமே விளையாடும் அவரை பார்ப்பதற்கு சென்னை மட்டுமல்லாமல் இந்தியாவில் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இருப்பினும் விரைவில் 42 வயதை தொடும் அவர் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதால் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்றார் போல் தன்னை தல என்று கொண்டாடும் தமிழக ரசிகர்களுக்காக தமது கேரியரின் கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்த நிலையில் 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து தற்போது சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

5 வருசம் விளையாடுங்க:
அத்துடன் தமது கேரியரின் கடைசி கட்டத்தில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதாக தெரிவித்த அவர் தம்மை வழியனுப்பும் வகையில் உள்ளூர் அணியை மிஞ்சி சென்னைக்காக ஆதரவு கொடுத்த கொல்கத்தா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் அந்த கருத்துக்களை அடிப்படையாக வைத்து இந்த வருடத்துடன் ஓய்வு பெறுகிறீர்களா என்று டேனி மோரிசன் கேட்டதற்கு “ஓய்வு பெறுவது பற்றி நீங்கள் தான் முடிவெடுத்துள்ளீர்கள் நான் இல்லை” என்று அவர் பதிலளித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனால் அடுத்த வருடமும் தோனி விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் பொதுவாகவே வித்தியாசமாக ஆச்சரியப்படும் முடிவுகளை எடுக்கும் தோனி ஓய்வு பெறுவதற்கான அறிகுறிகளை ஏற்கனவே கொடுத்து விட்டதாகவும் கவாஸ்கர் தமது நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கியதே அதற்கு மற்றுமொரு சாட்சி என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காயத்தை வைத்துக்கொண்டே 41 வயதிலும் அசால்டாக சிக்சர்களை அடிக்கும் தோனி கேப்டனாக இல்லை என்றால் கூட சாதாரண வீரராக இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி இன்னும் 5 வருடங்கள் விளையாட விரும்புவதாக மற்றொரு முன்னாள் வீரர் யூசுப் பதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஏன் தோனி விலக வேண்டும். தற்போது வந்துள்ள இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி அவர் இன்னும் 5 வருடங்கள் விளையாடலாம். இருப்பினும் கேப்டனாக தொடர முடியாது என்றாலும் அவ்வாறு செய்தால் அவர் பேட்டிங் செய்வதையும் சென்னை அணியின் ஆலோசகராக இருப்பதையும் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும். என்னை கேட்டால் தோனி அடுத்த 5 வருடங்கள் தாராளமாக விளையாடலாம். அதற்கு இம்பேக்ட் விதிமுறை மிகவும் உதவி செய்யும். அவரும் இதுவரை தனது ஓய்வு பற்றி எதுவும் சொல்லவில்லை. மற்றவர்கள் தான் எப்போது ஓய்வு பெறுகிறீர்கள் என்று பேசிக்கொண்டே இருக்கின்றனர்”

Yusuf Pathan

“என்னைப் பொறுத்த வரை இன்னும் அவருக்குள் நிறைய கிரிக்கெட் எஞ்சியிருப்பதாக தோன்றுகிறது. குறிப்பாக முழங்கால் வலியை தாண்டியும் இந்த ஐபிஎல் தொடரில் அவர் பெரிய சிக்சர்களை அசால்டாக அடிக்கிறார். இது இந்த விளையாட்டில் அவர் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : நம்பவே முடியல நீங்களா இப்படி? 16 வருஷத்துல இப்படி யாரும் பண்ணதில்ல – ஜோஸ் பட்லர் படைத்த மோசமான சாதனை

பொதுவாகவே சச்சின், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் இப்போது விளையாடினால் கூட ரசிகர்கள் அதை மிகுந்த ஆவலுடன் பார்ப்பார்கள். அந்த வகையில் 41 வயதாகும் தோனி இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி வருங்காலங்களில் விளையாடினால் நிச்சயமாக அது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement