ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் ஒரு வெற்றி 4 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ள அந்த அணி தடுமாற்றமாக விளையாடி வருவது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கால் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே தடுமாறும் சென்னை அணியின் பேட்டிங் வரிசையில் அவர் தான் தொடர்ச்சியாக அசத்தக்கூடிய தரமான பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார். இருப்பினும் முழங்கால் காயத்தால் விலகியுள்ள அவருக்கு பதிலாக மீண்டும் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி எழுதிய போட்டிகளில் சிஎஸ்கே அணியை வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை அணி தங்களது அடுத்தப் போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கிறது.
துரோகி ப்ராவோ:
அந்தப் போட்டி ஏப்ரல் 11ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்காக 2 அணி வீரர்களும் பயிற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்தப் பயிற்சியின் போது கொல்கத்தா அணியின் ஆலோசகர் ட்வயன் ப்ராவோ சென்னை அணியை சந்தித்தார்.
2011 முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய பிராவோ ஓய்வு பெறும் போது ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்தார். மேலும் தோனி தலைமையில் சென்னை 2011, 2018, 2021 கோப்பைகளை வெல்ல உதவிய அவர் 2023 கோப்பையை பவுலிங் பயிற்சியாளராக முத்தமிட உதவினார். அப்படிப்பட்ட அவர் இந்த வருடம் சென்னை அணியிலிருந்து வெளியேறி கொல்கத்தா அணியில் கௌதம் கம்பீர் இருந்து ஆலோசகர் பதவியில் செயல்பட்டு வருகிறார்.
கலாய்த்த தோனி:
அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியை சந்திக்க சென்ற பிராவோவை அங்குப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தோனி “துரோகி இங்கே இருக்கிறார்” என்று சொல்லி கலாய்த்து வரவேற்றார். அதாவது சிஎஸ்கே விட்டு வெளியேறி இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட வந்துள்ள பிராவோவை ஜாலியாக சிரித்துக்கொண்டே தோனி துரோகி என்று அழைத்தார். அதைக் கேட்ட ப்ராவோ “வாழ்க்கை நியாயமற்றது” என்று சிரிப்புடன் அவருக்கு பதிலளித்தார்.
இதையும் படிங்க: எழுதி வெச்சுக்கோங்க.. சாய் சுதர்சன் அந்த வீரர்களை தள்ளி இந்தியாவுக்காக அசத்துவாரு.. பசித் அலி
மேலும் ஜடேஜாவை பார்த்த ப்ராவோ கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினார். அத்துடன் தோனியிடம் செல்வதற்கு முன்பாக தோனி பேட்டை பிடிக்க தம்முடைய கையை சுழற்றுவது போல் ப்ராவோ செய்துக் காட்டி கலாய்த்தார். பின்னர் தோனியின் கையைப் பிடித்து பிராவோ நட்பாக பேசினார். மேலும் மொயின் அலி, கேப்டன் ரஹானே ஆகிய முன்னாள் சென்னை வீரர்களும் சிஎஸ்கே மற்றும் தோனியை சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசினர்.



