இதுக்குதான் இவ்வளவு பெரிய பில்டப்பா? தோனியின் 2 மணி அறிவிப்பால் அதிருப்தியடைந்த ரசிகர்கள் – என்ன நடந்தது?

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் செப்டம்பர் 25-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நேரலையில் வந்து ஒரு முக்கிய தகவலை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். அப்படி அவர் வெளியிட்டிருந்த அந்த பதிவினை அடுத்து தோனி என்னதான் சொல்லப் போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எழுந்தது.

MS Dhoni Ravi Ashwin

- Advertisement -

இந்நிலையில் தோனி அப்படி என்னதான் சமூக வலைதளத்தில் வந்து பேசப் போகிறார் என்று இன்று காலை முதலே அனைவரும் விவாதிக்க தொடங்கினர். ஒரு சிலர் தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறவே இந்த ஏற்பாடினை செய்திருப்பார் என்று கூறினர். மற்றொருபுறம் புதிய தொழில் தொடங்குவதோ அல்லது சினிமா தயாரிப்போ அல்லது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இருக்கும் டி20 உலக கோப்பையில் ஆலோசகராக செயல்படுவது குறித்தோ அவர் சில தகவல்களை தெரிவிப்பார் என்று கூறினார்.

ஆனால் இந்த யூகங்களுக்கு எல்லாம் மாறாக இன்று சரியாக இரண்டு மணிக்கு கூறியது போலவே நேரலையில் வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தோனி செய்த செயல் தற்போது ரசிகர்களை பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் ரசிகர்கள் அவரது இந்த செயல் மீது சற்று அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.

Dhoni

ஏனெனில் இன்று ஏதோ முக்கிய செய்தியை வெளியிடுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தோனி ஏமாற்றம் அளிக்கும் வகையில் : பிரபல தனியார் நிறுவனத்தின் பிஸ்கட் ஒன்றினை அறிமுகப்படுத்தினார்.

- Advertisement -

இந்த பிராண்ட் ஏற்கனவே 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதாகவும், இந்த ஆண்டு அதை மீண்டும் அறிமுகம் செய்வதால் இந்தியா மீண்டும் உலக கோப்பை வெல்லும் என்று கூறிவிட்டு அந்த பிஸ்கட் நிறுவனத்தை அவர் விளம்பரப்படுத்திவிட்டு எழுந்து சென்று விட்டார்.

இதையும் படிங்க : துலீப் ட்ராபி : நடத்தை தவறிய சக அணி இளம் வீரரை வெளியேற்றி ஸ்ட்ரிக் காட்டி கோப்பையை வென்ற கேப்டன் ரகானே – நடந்தது என்ன

இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் இத்தனை கோடி பேர் பின் தொடரும் ஒரு மாபெரும் லீடராக இருந்து கொண்டு இது போன்று ஒரு விளம்பரத்திற்காக நடந்து கொள்வதா என்று சில கருத்துக்களை சமூக வலைதளத்தின் மூலம் பகிர்ந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement