124 டெசிபல் சத்தம்.. மஞ்சள் கடலாக மாறிய லக்னோ.. ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக தோனி சரித்திர சாதனை

MS Dhoni Lucknow
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ரவீந்திர ஜடேஜா 57*, ரஹானே 36, மொய்ன் அலி 30 ரங்கள் எடுத்த உதவியுடன் 177 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதை சேசிங் செய்த லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 82, குவிண்டன் டீ காக் 54 ரன்கள் அடித்து 19 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 7 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்த சென்னை பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் இந்தப் போட்டியில் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பேட்டிங் மட்டுமே சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

- Advertisement -

தோனி சாதனை:
முன்னதாக இந்தியாவுக்கு 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை கேப்டனாக வென்று கொடுத்த தோனிக்கு எதிரணி என்று பார்க்காமல் லக்னோவில் ஏராளமான ரசிகர்கள் அமோகமான வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக போட்டி நடைபெற்ற லக்னோ மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் மஞ்சள் உடை அணிந்திருந்து சிஎஸ்கே அணிக்கு ஆதரவு கொடுத்தனர்.

அதன் காரணமாக இது லக்னோவா அல்லது சேப்பாக்கமா என்று யோசிக்கும் அளவுக்கு லக்னோ மைதானம் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்திருந்த ரசிகர்களால் கடல் போல காட்சியளித்தது. அந்தளவுக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்ய வந்த போது 124 டெசிபல் சத்தத்தில் விண்ணதிற முழங்கி ஆரவாரம் செய்து மாபெரும் வரவேற்பு கொடுத்தனர். அந்த வரவேற்புக்கு மத்தியில் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த தோனி 2வது கீப்பரின் தலைக்கு மேல் சிக்ஸர் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

அதே வேகத்தில் கடைசி ஓவரில் 101 மீட்டர் சிக்ஸருடன் 6, 4, 2, 4 என 3 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 28* (9) ரன்கள் விளாசி மீண்டும் அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். அந்த 28 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக இதுவரை தோனி 5023* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 5000 ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சரித்திர சாதனையும் தோனி படைத்துள்ளார்.

இதையும் படிங்க: அதுக்காக எம்எஸ் தோனிக்கு தலை வணங்குறேன்.. சிஎஸ்கே’வை மீண்டும் சந்திப்போம்.. மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

அவருக்கு அடுத்தபடியாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக 4369 ரன்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார். அது போக ஐபிஎல் தொடரில் 40 வயதுக்குப்பின் 500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் தோனி இப்போட்டியில் படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக கிறிஸ் கெயில் 40 வயதுக்கு பின் 481 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement