அதுக்காக எம்எஸ் தோனிக்கு தலை வணங்குறேன்.. சிஎஸ்கே’வை மீண்டும் சந்திப்போம்.. மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேட்டி

Marcus Stoinis
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற 33வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை ரவீந்திர ஜடேஜா 57*, எம்எஸ் தோனி 28*, ரகானே 36, மொயின் அலி 30 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 176/6 ரன்கள் குவித்தது.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 175 ரன்கள் துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் – குவிண்டன் டீ காக் ஆகியோர் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று விளையாடி 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்தனர். அதில் குயிண்டன் டீ காக் அரை சதமடித்து 54 (43) ரன்கள் அவுட்டானார்.

- Advertisement -

மகத்தான தோனிக்கு மரியாதை:
அதே போல மறுபுறம் அசத்திய கேப்டன் கேஎல் ராகுல் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 82 (53) ரன்கள் குவித்தார். இறுதியில் நிக்கோலஸ் பூரான் 23* (9) ரன்கள் எடுத்ததால் 19 ஓவரிலேயே இலக்கை எட்டி லக்னோ எளிதாக வென்றது. அதனால் பதிரனா, ரஹ்மான் தலா 1 விக்கெட் எடுத்தும் பந்து வீச்சில் சுமாராகவே செயல்பட்ட சென்னை தங்களுடைய 3வது தோல்வியை பதிவு செய்தது.

இந்நிலையில் இப்போட்டியில் கடைசி நேரத்தில் வந்து 28* (9) ரன்கள் விளாசி அற்புதமாக ஃபினிஷிங் செய்த தோனிக்கு தலைவணங்குவதாக லக்னோவின் ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் வைத்துள்ளார். அத்துடன் இன்னும் சில நாட்களில் மீண்டும் சென்னை அணியை சேப்பாக்கத்தில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது எங்களுக்கு முக்கியமான வெற்றியாகும். இன்னும் சில நாட்களில் மீண்டும் சென்னையை நாங்கள் சந்திக்க உள்ளோம். அதற்கு முன்பாக வெற்றிப் பாதைக்கு திரும்பியதில் மகிழ்ச்சி. பந்து வீச்சில் நன்றாக துவங்கிய நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்களை எடுத்தோம். இருப்பினும் கடைசியில் நன்றாக ஃபினிஷிங் செய்த சிஎஸ்கேவுக்கு பாராட்டுக்கள். குறிப்பாக எம்.எஸ். தோனிக்கு தலைவணங்குகிறேன்”

இதையும் படிங்க: தோனி வந்தாலே அவங்க பயப்படுறாங்க.. அங்க சிஎஸ்கே ரசிகர்களை வேற சமாளிக்கனும்.. கேஎல் ராகுல் பேட்டி

“டீ காக் – கேஎல் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை உறுதி செய்தனர். ஆரம்பத்திலேயே அவர்கள் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்ததால் மற்ற பேட்ஸ்மேன்கள் தங்களின் திட்டத்தில் விளையாடினார்கள். ஒரு அணியாக நாங்கள் தன்னம்பிக்கையை கொண்டுள்ளோம். எங்களுடைய அணியில் பல வீரர்கள் பல்வேறு தருணங்களில் வந்து வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றனர்” என்று கூறினார்.

Advertisement