தோனி வந்தாலே அவங்க பயப்படுறாங்க.. அங்க சிஎஸ்கே ரசிகர்களை வேற சமாளிக்கனும்.. கேஎல் ராகுல் பேட்டி

KL rahul 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 33வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 9 வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. லக்னோவில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 176/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 57*, ரகானே 36, மொயின் அலி 30, எம்எஸ் தோனி 28* ரன்கள் எடுத்தனர்.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 177 ரன்கள் துரத்திய லக்னாவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் குவிண்டன் டீ காக் ஆகியோர் ஆரம்ப முதலே சென்னை பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டனர். அந்த வகையில் 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் டீ காக் 54 (43) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

தோனி வந்தாலே:
மறுபுறம் அசத்திய கேஎல் ராகுல் பவுண்டரி 3 சிக்சருடன் 82 (53) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் பூரான் 23* (12) ரன்கள் 19 ஓவரிலேயே இலக்கை எட்டிய லக்னோ எளிதாக வென்றது. அதனால் பதிரனா 1, ரஹ்மான் 1 விக்கெட் எடுத்தும் சென்னை தங்களுடைய 3வது தோல்வியை பதிவு செய்தது. லக்னோவின் இந்த வெற்றிக்கு 82 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் 160 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய இப்போட்டியில் சென்னை 176 ரன்கள் அடிப்பதற்கு தோனி தான் காரணம் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுடைய அடுத்த போட்டியில் சேப்பாக்கத்தில் சென்னை அணியை சிஎஸ்கே ரசிகர்களுக்கு மத்தியில் எதிர்கொள்வதை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னையை 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தியிருந்தால் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன்”

- Advertisement -

“ஏனெனில் பிட்ச் மெதுவாக இருப்பதைப் போல் உணர்ந்தேன். எனவே 160 – 165 ரன்கள் தான் சரியான இலக்காகும். ஆனால் எம்எஸ் தோனி நடந்து வந்ததும் பவுலர்கள் பதற்றமாக உணர்கின்றனர். அவர் நடந்து வந்ததும் பவுலர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அப்போது ரசிகர்களின் சத்தமும் உச்சமாக இருக்கிறது. அதற்கு மத்தியில் இது போன்ற ஃபினிஷிங்கை தோனி வரலாற்றில் செய்துள்ளார்”

“இருப்பினும் பேட்டிங்கில் இதை சேசிங் செய்ய முடியும் என்று நாங்கள் உணர்ந்தோம். சென்னை ஸ்பின்னர்கள் எங்களுக்கு தடையை கொடுக்க முயற்சித்தனர். எனவே நாங்கள் நல்ல துவக்கத்தை பெறுவதற்கு முயற்சித்தோம். அதிர்ஷ்டவசமாக அது எங்களுக்கு கிடைத்தது. பார்ட்னர்ஷிப் செல்லும் போது நீங்கள் சில ரிஸ்க் எடுத்து விளையாடலாம்”

இதையும் படிங்க: 134 ரன்ஸ்.. ஓப்பனிங்கிலேயே சிஎஸ்கே’வை முடித்த கேஎல் ராகுல்.. விராட் கோலியை முந்தி ஸ்பெஷல் சாதனை

“அடுத்த போட்டியில் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்பவில்லை. எனவே சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கும் சூழ்நிலையில் விளையாட கற்றுக் கொள்ளுமாறு எங்கள் அணி வீரர்களிடம் சொன்னேன். ஏனெனில் மீண்டும் நாங்கள் சென்னையை சில நாட்களில் சந்திக்க உள்ளோம். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement