134 ரன்ஸ்.. ஓப்பனிங்கிலேயே சிஎஸ்கே’வை முடித்த கேஎல் ராகுல்.. தோனியை முந்தி ஸ்பெஷல் சாதனை

LSG vs CSK
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 34வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ரச்சின் ரவீந்திர கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த கேப்டன் ருதுராஜ் தடுமாற்றமாக விளையாடி 17 (13) ரன்களில் அவுட்டானார்.

அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் துவக்க வீரராக விளையாடிய அஜிங்க்ய ரஹானே 36 (24) ரன்களில் க்ருனால் பாண்டியா சுழலில் க்ளீன் போல்ட்டானார். அப்போது 4வது இடத்தில் களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் எதிர்ப்புறம் நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே 3, சமீர் ரிஸ்வி 1 ரன்னில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தையும் பின்னடைவையும் கொடுத்தனர்.

- Advertisement -

ராகுல் சாதனை:
அடுத்ததாக வந்த மொயின் அலி 3 சிக்சருடன் 30 (20) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாம்பவான் எம்எஸ் தோனி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (9) ரன்கள் குவித்த நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் எதிர்புறம் கடைசி வரை அவுட்டகாமல் அசத்திய ரவீந்திர ஜடேஜா அரை சதமடித்து 57* (40) ரன்கள் அடித்ததால் 20 ஓவரில் சென்னை 176/6 ரன்கள் குவித்தது.

லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 177 ரன்களை துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குவிண்டன் டீ காக் ஆகியோர் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். குறிப்பாக பவர்பிளே முழுவதும் விக்கெட்டை விடக்கூடாது என்ற நோக்கத்தில் விளையாடிய இந்த ஜோடியில் டீ காக் மெதுவாக பேட்டிங் செய்தார். ஆனால் எதிர்புறம் அதிரடியாக விளையாடிய ராகுல் 32 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினர்.

- Advertisement -

அந்த வகையில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி 15 ஓவர்களில் 134 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோவின் வெற்றியை உறுதி செய்தது. அப்போது டீ காக் அரை சதமடித்து 54 (43) ரன்களில் முஸ்தபிசூர் ரஹ்மான் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அசத்தலாக விளையாடிய ராகுல் 9 பவுண்டரி சிக்சருடன் 82 (53) ரன்கள் குவித்து ஜடேஜாவின் அபார கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் அதிக முறை (25) 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை உடைத்து அவர் புதிய சாதனை படைத்தார் இதற்கு முன் எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பராக 24 முறை 50+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: மறைமுகமாக ஹார்டிக் பாண்டியாவிற்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பேசிய – ஜஸ்பிரீத் பும்ரா

இறுதியில் நிக்கோலஸ் பூரான் 23*, ஸ்டோனிஸ் 8* ரன்கள் எடுத்ததால் 19 ஓவரிலயே 180/2 ரன்கள் எடுத்த லக்னோ 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மறுபுறம் பேட்டிங்கில் 200 ரன்கள் எடுக்காமல் பந்து வீச்சில் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்ட சென்னை 7 போட்டிகளில் 3வது தோல்வியை பதிவு செய்தது.

Advertisement