மறைமுகமாக ஹார்டிக் பாண்டியாவிற்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் பேசிய – ஜஸ்பிரீத் பும்ரா

Bumrah-and-Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது பஞ்சாப் பணியை அதன் சொந்த மைதானத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதோடு இந்த தொடரில் தங்களது மூன்றாவது வெற்றியும் பதிவு செய்த மும்பை அணி மீண்டும் தங்களது வெற்றி பயணத்தை மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.

அந்த வகையில் நடைபெற்று இந்த முடிந்த இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது.

- Advertisement -

மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோகித் சர்மா 36 ரன்களையும் குவித்தனர். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மும்பை அணியின் சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஒரு கட்டத்தில் மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெறவே வாய்ப்பு இல்லை என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா இந்த போட்டியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் திகழ்ந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பேசிய அவர் கூறுகையில் : நாங்கள் நினைத்ததை விட இந்த போட்டி மிகவும் நெருக்கமாக சென்றுவிட்டது. முன்கூட்டியே இந்த போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினேன். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் பந்து இரண்டு ஓவர்கள் தான் ஸ்விங் ஆகும். எனவே அந்த ஓவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த பார்மட் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சவாலான ஒன்று.

இதையும் படிங்க : 6, 4, 2, 4.. கீப்பருக்கு மேல் பறந்த 101மீ சிக்ஸ்.. அசத்திய ஜடேஜா.. 42 வயதில் தெறிக்க விடும் தல தோனி மாஸ் சாதனை

எனவே பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் முன்னர் நம்முடைய செயல்பாட்டை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று பும்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஹார்டிக் பாண்டியாவின் செயல்முறையை அவர் மாற்றி செயல்படுத்த உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஹார்டிக் பாண்டியாவின் செயலை கண்டித்து தான் பவர்பிளே ஓவர்களில் பும்ரா பந்து வீச ஆர்வத்தை தெரிவித்து அவர் இந்த பேட்டியை அளித்துள்ளதாக தெரிகிறது.

Advertisement