6, 4, 2, 4.. கீப்பருக்கு மேல் பறந்த 101மீ சிக்ஸ்.. அசத்திய ஜடேஜா.. 42 வயதில் தெறிக்க விடும் தல தோனி மாஸ் சாதனை

MS Dhoni 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 34வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சென்னைக்கு ஆரம்பத்திலேயே ரச்சின் ரவீந்திரா கோல்டன் டக் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் துவக்க வீரராக விளையாடிய ரகானே நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் ருதுராஜ் கைக்வாட் தடுமாற்றமாக விளையாடி 17 (14) ரன்களில் ஆட்டமிந்தார். அடுத்த சில ஓவரிலேயே மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரகானேவும் 36 (24) ரன்களில் க்ருனால் பாண்டியா சுழலில் க்ளீன் போல்டானார்.

- Advertisement -

அசத்திய சிஎஸ்கே:

ஆனால் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே வழக்கத்திற்கு மாறாக மிகவும் தடுமாற்றமாக விளையாடி 3 (8) ரன்களில் அவுட்டானார். அதற்கடுத்ததாக இம்பேக்ட் வீரராக வந்த சமீர் ரிஸ்வி திணறலாக விளையாடி 1 (5) ரன்னில் அவுட்டாகி மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 90/5 என தடுமாறிய சென்னை 150 ரன்கள் தொடுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

அப்போது 4வது இடத்தில் களமிறங்கியிருந்த மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் அவருடன் அடுத்ததாக வந்து சேர்ந்த மொய்ன் அலி ஆரம்பத்தில் தடுமாற்றமாக விளையாடினார். இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய ரவீந்திர ஜடேஜா அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அப்போது ரவி பிஸ்னோய் வீசிய 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட மொய்ன் அலி 30 (20) ரன்கள் குவித்து அவுட்டானார்.

அடுத்ததாக வந்த ஜாம்பவான் எம்.எஸ். தோனி முதல் பந்தலையே பவுண்டரி அடித்து 2வது பந்தில் விக்கெட் பந்தில் விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் அட்டகாசமான சிக்சரை பறக்க விட்டார். அதே வேகத்தில் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளில் 101 மீட்டர் சிக்ஸருடன் 6, 4, 2, 4 என 3 பவுண்டரிகளை அடித்த அவர் மொத்தம் 28* (9) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் எதிர்புறம் ஜடேஜா 57* (40) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சென்னை 176/6 ரன்கள் எடுத்து அசத்தியது.

இதையும் படிங்க: அடிக்காத மிட்சேலை கழற்றி விட்ட ருதுராஜ்.. லக்னோ போட்டியின் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் 2 மாற்றம்

லக்னோ சார்பில் அதிகபட்சமாக க்ருனால் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை விட இந்தப் போட்டியில் எடுத்த 28 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் 40 வயதை கடந்த பின் 500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 40 வயதை கடந்த பின் 481 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்

Advertisement