அடிக்காத மிட்சேலை கழற்றி விட்ட ருதுராஜ்.. லக்னோ போட்டியின் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் 2 மாற்றம்

Ruturaj
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் 34வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

மறுபுறம் சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படுவதாக புதிய கேப்டன் ருதுராஜ் கைக்வாட் அறிவித்தார். முதலாவதாக ஆல் ரவுண்டராக விளையாடி வந்த டேரில் மிட்சேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்படுவதாக ருதுராஜ் அறிவித்தார். இந்த வருடம் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட மிட்சேல் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

2 மாற்றம்:
குறிப்பாக அதிரடியாக விளையாட வேண்டிய மிடில் ஆர்டரில் தடுமாற்றமாக விளையாடிய அவர் பல தருணங்களில் “ஒன்று அடிங்கள் இல்லையென்றால் அவுட்டாகுங்கள்” என்று சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பும் அளவுக்கு பேட்டிங் செய்தார் என்றே சொல்லலாம். எனவே அவருக்கு பதிலாக சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான மொயின் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளதை ரசிகர்கள் வரவேற்கின்றனர்.

அதே போல சர்துள் தாக்கூருக்கு பதிலாக தீபக் சஹர் மீண்டும் சேர்க்கப்படுவதாக ருதுராஜ் கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்களும் முதலில் பந்து வீச விரும்பினோம். இருப்பினும் கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாங்கள் நன்றாக விளையாடினோம். மும்பைக்கு எதிராக கடந்த போட்டியில் பெற்ற வெற்றி பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது”

- Advertisement -

“எனவே இந்த போட்டியிலும் இலக்கை கட்டுப்படுத்துவது எங்களுக்கு தன்னம்பிக்கையாக இருக்கும். நாங்கள் மனநிறைவை பெற விரும்பவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற முயற்சிக்கிறோம். கடந்த சில போட்டிகளில் துரதிஷ்டவசமாக நான் அவுட்டானேன். தற்போது தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறேன். எங்கள் அணியில் 2 மாற்றங்கள். மிட்சேல், தாக்கூருக்கு பதிலாக மொய்ன், தீபக் சேர்க்கப்படுகின்றனர்” என்று கூறினார்.

இதையும் படிங்க: ரன்ஸ் அடிக்கலன்னு கழற்றி விட்றாதீங்க.. அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் 100% விளையாடனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை

லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன்: ருதுராஜ் கைக்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்தரா, அஜிங்க்ய ரஹானே, மொய்ன் அலி, சிவம் துபே, மகேந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கீப்பர்) தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டே, மதீசா பதிரனா, முஸ்தபிஷூர் ரஹ்மான்

Advertisement