மும்பை அணியை பழிவாங்க நினைக்கிறீர்களா ? முரளி கார்த்திக் கேள்விக்கு – சாமர்த்தியமான பதிலளித்த தல தோனி

CskvsMi
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது 13 ஆவது சீசனுக்கான முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே துவங்கியுள்ளது. அபுதாபியில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதனை தொடர்ந்து இந்த போட்டியில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரத்தை தெரிவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

மேலும் முதல் போட்டியில் முக்கிய வீரர்களான ஆல்ரவுண்டர் பிராவோ மற்றும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ஆகியோர் விளையாடவில்லை. பிராவோக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் இளம் வீரரான சாம் கரன் மற்றும் தாஹிர்க்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான லுங்கி நெகிடி ஆகியோர் விளையாடுகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் துவக்க வீரராக நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக வீரரான முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாட்சனுடன் இணைந்து முரளி விஜய் துவக்க வீரராக களமிறங்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் டாஸ் நிகழ்வின் போது தொகுப்பாளரான முரளிகார்த்திக் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

CSKvsMI

அப்போது கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கோப்பை இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியதற்காக நீங்கள் மும்பை அணியை பழிவாங்க நினைக்கிறீர்களா ? என்ற கேள்வியை முரளி கார்த்திக் எழுப்பினார்.

Csk-vsMi

அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த தோனி : “கிரிக்கெட் என்பது ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு” இது பழிதீர்க்கும் களம் அல்ல. இந்த போட்டியை நான் ஒரு நல்ல போட்டியாகவே பார்க்கிறேன் என்று டோனி தனது சாமர்த்தியமான பதில் அவருக்கு அளித்தார். அவரின் இந்த பதில் அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement